Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vastu Tips: உங்கள் வீட்டில் பழைய துணி இருக்கா? – வாஸ்துப்படி என்ன செய்யலாம்?

வாஸ்து சாஸ்திரப்படி, பழைய, கிழிந்த ஆடைகள் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும். இவை மன அழுத்தம், நிதிப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பழைய ஆடைகளை தானம் செய்யக் கூடாது; மறுசுழற்சி செய்யலாம் அல்லது பயனுள்ளதாக மாற்றலாம். அதேபோல் சனிக்கிழமை கருப்பு ஆடைகளை தானம் செய்வது நன்மை பயக்கும்.

Vastu Tips: உங்கள் வீட்டில் பழைய துணி இருக்கா? – வாஸ்துப்படி என்ன செய்யலாம்?
பழைய துணிகள்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 02 Aug 2025 18:32 PM

வீடு கட்டுவதற்கு மட்டுமல்ல, வீட்டில் வைக்கப்படும் பொருட்களுக்கும் விதிகள் உள்ளன என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வீட்டில் வைக்கப்படும் பொருட்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடம் மற்றும் முக்கியத்துவம் உண்டு என்று சொல்லப்படுகிறது . அதேபோல், பழைய, கிழிந்த, பயனற்ற துணிகளை மாதக்கணக்கில் வீட்டில் வைத்திருக்கும் பழக்கம் உங்களிடம் இருந்தால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்தப் பழக்கம் நல்லதல்ல என்பதை உணர வேண்டும். இவை எதிர்மறை சக்தியை ஈர்க்கும். அந்த சக்தியானது வீட்டில் உள்ள அனைவருக்கும் பரவும் என கூறப்படுகிறது. அதனைப் பற்றி நாம் காணலாம்.

பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்ன?

வாஸ்து சாஸ்திரத்தின்படி, கிழிந்த, பழைய மற்றும் பயனற்ற ஆடைகள் அசுபத்தை தரக்கூடியது. இவை தனி மனித வாழ்க்கையில் மன அழுத்தம் மற்றும் நிதிப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது. அதேசமயம் உங்களின் ஆடைகள் நிறம் இழந்து, கறை படிந்து, பயன்படுத்தப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்குமேயானால் அல்லது கிழிந்து உங்களுக்கு ஏற்ற அளவில் இல்லாமல் இருக்கும் ஆடைகள் வீட்டில் எதிர்மறையை பரப்பும் என சொல்லப்படுகிறது. எனவே, அத்தகைய ஆடைகளை நீண்ட காலம் வீட்டில் வைக்காமல், அல்லது அணியாமல் ஒதுக்கி வைத்துவிட்டு, திடீரென அணியக்கூடாது.

மேலும் வாஸ்துவின்படி தானம் செய்வதாக இருந்தால் எக்காரணம் கொண்டும் ஒருபோதும் பழைய மற்றும் கிழிந்த ஆடைகளை தானம் செய்யக்கூடாது. எப்போதும் நல்ல நிலையில் உள்ள மற்றும் சுத்தமான ஆடைகளை மட்டுமே தானம் செய்வது நல்லது என்று கருதப்படுகிறது. கிழிந்த மற்றும் சேதமடைந்த பொருட்களை மற்றவர்களுக்கு தானம் செய்வது வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகர்க்கும். இதனால் குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியோ அமைதியோ இருக்காது.

Also Read: Vastu Tips : கறிவேப்பிலை செடிக்கும் வாஸ்து சாஸ்திரங்கள் உண்டு.. வாஸ்து நம்பிக்கை சொல்வது இதுதான்!

அதேசமயம் பழைய துணிகளை மீண்டும் பயன்படுத்தி புதிய துணிகளை உருவாக்கக்கூடியவர்களுக்குக் கொடுக்கலாம். அவற்றை மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பலாம். கூடுதலாக, கிழிந்த துணிகளை கயிறுகளாகவும், துப்புரவுத் துணிகளாகவும், தையலுக்காகவும் அல்லது வீட்டில் பிற நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தலாம்.

மேலும் துணிகள் வைக்கக்கூடிய உங்கள் வீட்டு அலமாரியை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள். பழைய துணிகளை தனியாக பிரித்து வையுங்கள். இப்படிச் செய்வது வீட்டில் எதிர்மறை சக்தியின் ஓட்டத்தைக் குறைக்கும். ஜோதிட சாஸ்திரத்தின்படி பழைய ஆடைகள் சனி மற்றும் ராகுவுடன் தொடர்புடையவையாக அறியப்படுகிறது. எனவே பழைய ஆடைகளை வைத்திருக்கும் வீடுகளில் சனி மற்றும் ராகுவின் அசுப விளைவுகள் இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், வீட்டில் இருந்து பழைய ஆடைகளை அகற்றுவது இந்த கிரகங்களின் தீய விளைவுகளைக் குறைக்கிறது.

Also Read: Vastu Tips: இந்த திசையில் மீன் தொட்டியை வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டும்!

அதுமட்டுமல்லாமல் சனிக்கிழமை கருப்பு ஆடைகளை தானம் செய்வது சனியின் தீய விளைவுகளைக் குறைக்கிறது. மேலும் பழைய துணிகளை குப்பையில் போடவோ அல்லது எரிக்கவோ கூடாது. ஒருவேளை உங்களின் பழைய ஆடைகளை அணியும் அளவுக்கு நன்றாக இருந்தால் அவற்றை சுத்தப்படுத்தி ஏழைகளுக்கு தானம் செய்யலாம். இதைச் செய்வது வீட்டிற்கு நேர்மறையைத் தரும். இது வாஸ்து குறைபாடுகளை நீக்கும். இது வாழ்க்கையில் செழிப்பைத் தரும்.

(வாஸ்து சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள செய்திகள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)