Vastu Tips: தவறான திசையில் நின்று சமைத்தால் இவ்வளவு பிரச்னையா?
சமையலறையின் வாஸ்து சாஸ்திரம் வீட்டு நல்வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தென்கிழக்கு திசை சமையலறைக்கு சிறந்தது. கிழக்கு நோக்கி சமைப்பது நேர்மறை ஆற்றலைத் தருகிறது. மேற்கு அல்லது வடக்கு நோக்கி சமைப்பது எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தி, மன அழுத்தம் போன்ற பிரச்னைகளை உண்டாக்கும் என சொல்லப்படுகிறது.

வாஸ்து சாஸ்திரம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமானது. அது சரியாக ஒரு வீட்டில் அமைந்து விட்டால் நிச்சயம் மகிழ்ச்சி, செல்வ வளம், வளர்ச்சி என்பது நிச்சயம் இருக்கும் என நம்பப்படுகிறது. இப்படியான நிலையில் ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. முன்பு காலத்தில் ஒரே அறையில் சமையலறை என பிரித்து செயல்பட்டாலும் அதுவும் சரியாக வாஸ்து திசையில் அமைக்கப்பட்டிருப்பதை காணலாம். தற்காலத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்படும் வீட்டில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்தை சமையலறை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. மேலும், சமையலறையில் நாம் சமைக்கும்போது எந்த திசையில் நிற்கிறோம் என்பது கூட முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது நம் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, சமையலறை உணவு சமைக்க ஒரு இடம் மட்டுமல்ல, அது ஒரு ஆற்றல் மையமாகவும் உள்ளது. உணவு சமைக்கும்போது தவறான திசையில் நிற்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. அப்படியாக சமைக்கும்போது சரியான திசையில் நிற்பது ஏன் முக்கியம் என்பதை பற்றி நாம் காணலாம்.
Also Read: Vastu Tips: குடும்ப ஆரோக்கியம்.. கவனிக்க வேண்டிய 8 வாஸ்து விஷயம்!




எந்த திசையில் நின்று சமைக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, தென்கிழக்கு திசை (அக்னி மூலை) சமையலறைக்கு சிறந்தது என்று கருதப்படுகிறது. யாராவது வடக்கு அல்லது மேற்கு திசையில் நின்றவாறு சமைத்தால், அக்னி மூலை சமநிலையற்றதாகிவிடும். இது மன அழுத்தம், நோய்கள் மற்றும் குடும்ப தகராறுகளுக்கு வழிவகுக்கிறது. கிழக்கு திசை சூரிய சக்தியின் மூலமாகும். கிழக்கு நோக்கி நின்று சமைக்கும்போது, நமக்கு நேர்மறை ஆற்றல் கிடைக்கிறது. எதிர் திசையில், அதாவது மேற்கு நோக்கி நிற்பது, ஆற்றல் ஓட்டத்தை சீர்குலைக்கிறது. இது சோம்பல், சோர்வு மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
தவறான திசையில் சமைப்பது சமையலறையில் வாஸ்து குறைபாட்டை உருவாக்குகிறது. இது வீட்டின் நல்வாழ்வைத் தடுக்கிறது. இது வருமானத்தை நேரடியாகப் பாதிக்கிறது. இது பண இழப்பு, வீணான செலவுகள் அல்லது வேலையில் தடைகளை ஏற்படுத்தும். தவறான திசையிலிருந்து வெளிப்படும் எதிர்மறை ஆற்றல் வீட்டின் சூழ்நிலையைப் பாதிக்கிறது, இதனால் வீட்டில் மோதல், கருத்து வேறுபாடு மற்றும் பரஸ்பர நல்லிணக்கம் இல்லாமை ஏற்படுகிறது.
Also Read: Vastu Tips: தூங்கும்போது இப்படி செய்யாதீங்க.. பண பிரச்னை வரலாம்!
தவறான திசையில் சமைப்பது மன உறுதியின்மை மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தும். இது சமையலறையில் வேலை செய்யும் போது மனதில் பல்வேறு எண்ணங்களுக்கு வழிவகுக்கும். இது வேலையில் கவனக்குறைவு மற்றும் விபத்துகளுக்கு வழிவகுக்கும். வாஸ்து சாஸ்திரத்தில் திசைக்கு மத முக்கியத்துவம் உண்டு. சூரிய பகவானின் திசை என்பதால் கிழக்கு நோக்கி சமைப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. தெற்கு நோக்கி சமைப்பது பித்ரு தோஷம் அல்லது எதிர்மறை ஆற்றல்களை ஊக்குவிக்கும் என சொல்லப்படுகிறது.
(வாஸ்து சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)