Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ravi Mohan : நானே வாடகை வீட்டில்தான் இருக்கிறேன்.. 3BHK படத்துடன் சொந்த வாழ்க்கையை ஒப்பிட்ட ரவி மோகன்!

Ravi Mohan Talk About 3BHK Movie Story : தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகனாகக் கலக்கி வருபவர் ரவி மோகன். இவர் இன்று நடைபெற்ற சித்தார்த் மற்றும் சரத்குமாரின் 3BHK படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் அவர் தனது சொந்த வாழ்க்கையும் 3BHK திரைப்படத்தின் கதைபோல இருப்பதாகப் பேசியுள்ளார். தற்போது இது குறித்தான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ravi Mohan : நானே வாடகை வீட்டில்தான் இருக்கிறேன்.. 3BHK படத்துடன் சொந்த வாழ்க்கையை ஒப்பிட்ட ரவி மோகன்!
நடிகர் ரவி மோகன் Image Source: Instagram
barath-murugan
Barath Murugan | Published: 26 Jun 2025 16:22 PM

நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ஜெயம் (Jayam) திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக நுழைந்து சுமார் 22 வருடங்களை சினிமாவில் கதாநாயகனாகக் கடந்துள்ளார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் காதலிக்க நேரமில்லை (Kadhalikka Neramillai). இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் வெளியான இப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களிலும் நடிகராக நடித்து வருகிறார்.

நடிகராக வாழ்க்கையைத் தொடங்கிய ரவி மோகன், தற்போது தயாரிப்பாளராகவும் சினிமாவில் புதிய அவதாரம் எடுத்துள்ளார். ரவி மோகன் ஸ்டூடியோஸ் (Ravi Mohan Studios) என புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய நிலையில், முதல் படமாகத் தனது படத்தைத் தயாரிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கவுள்ளார். இந்த படத்திற்குப் படக்குழு ப்ரோகோட் (Bro Code) என்ற டைட்டிலையும் வைத்துள்ளது.

இந்நிலையில் இன்று 2025, ஜூன் 26ம் தேதியில் நடைபெற்ற 3BHK படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் ரவி மோகன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ரவி மோகன், “3BHK திரைப்படத்தின் கதை தற்போது எனது வாழ்க்கையிலும் ஒத்துப்போகிறது. இப்படம் எனக்கு உத்வேகத்தை கொடுத்திருக்கிறது” என்று பேசியுள்ளார். இது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

3BHK படத்தின் ட்ரெய்லர் ரிலீஸில் ரவி மோகன் பேசிய விஷயம் :

சரத்குமார் மற்றும் சித்தார்த்தின்முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 3BHK. இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி இன்று 2025, ஜூன் 26ம் தேதியில் கோலாகலமாக நடைபெற்றிருந்தது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய ரவி மோகன், “நான் பிறந்ததிலிருந்து இதுவரைக்கும், வாடகை வீட்டில் வாழ்ந்ததே இல்லை. ஆனால் இப்போது நான் வாடகை வீட்டில் இருக்கிறேன். அதனால் இந்த 3BHK படத்தோட என்னையும் ஒப்பிட முடிந்தது.

மேலும் இந்த 3BHK திரைப்படத்தைப் பார்த்தும் எனக்கு ஒரு உத்வேகமாக இருந்தது. என்னோட வாழ்க்கையை ரிலீவ் பண்ணது போல இருந்தது. மேலும் இனிமேல் என்னுடைய வாழ்க்கையை இனிமேல்தான் வாழப்போகிறேன் என்று தோன்றியது. ஒரு படமானது மற்றவர்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்தால் போதும், அதைப்போல இந்த 3BHK படமானது எனக்கு நல்ல உத்வேகத்தை கொடுத்திருக்கிறது” என நடிகர் ரவி மோகன் பேசியிருந்தார்.

3BHK ட்ரெய்லர் ரிலீசை ரவி மோகன் பேச்சு :

3BHK திரைப்படம் :

இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்தான் 3BHK. இந்த படத்தில் முன்னணி நாயகனாக சித்தார்த் நடிக்க, முக்கிய வேடத்தில் நடிகர்கள் சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் எனப் பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படமானது மிடில் கிளாஸ் குடும்பத்தின் வீடு வாங்குவதில் ஏற்படும் பிரச்சனைகள், அவர்கள் படும் கஷ்டங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது. மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் 2025, ஜூலை 4ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.