Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் நடிக்கிறாரா சூரி? வைரலாகும் தகவல்

Actor Soori: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து தற்போது படங்களை தயாரிக்கும் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் சூரி நடிக்கும் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் நடிக்கிறாரா சூரி? வைரலாகும் தகவல்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சூரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Jun 2025 13:00 PM

நடிகர் சூரி (Actor Soori) தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தற்போது தொடர்ந்து நாயகனாக படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சூரி இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Director Lokesh Kanagaraj) தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ஒரு படத்தின் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெலிசேரி இயக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இயக்குநர் லிஜோ ஜோஸ் பெலிசேரி (Director Lijo Jose Pellissery) மலையாள சினிமாவில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணியில் படம் வெளியானால் நிச்சயமாக படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காமெடியன் டூ நாயகன்… சூரியின் சினிமா பயணம்:

சினிமாவில் காமெடியனாக அறிமுகம் ஆகி பின்பு நாயகனாக மாறி வெற்றிப்பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் சொர்ப்பமே. அந்த வெற்றிப்பெற்றவர்களின் பட்டியலில் நடிகர் சூரியின் பெயர் தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்தார் நடிகர் சூரி.

அதனைத் தொடர்ந்து கருடன், கொட்டுக்காளி, விடுதலை பாகம் 2 என தொடர்ந்து சீரியசான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் சூரி சமீபத்தில் வெளியான மாமன் படத்தின் மூலம் தனது பழைய காமெடியை மீட்டெடுத்தார் என்றே சொல்லலாம். ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சூரியின் நடிப்பில் உருவாகி வரும் மண்டாடி படம்:

மாமன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரி தற்போது நடித்து வரும் படம் மண்டாடி. இந்தப் படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கி வருகிறார். மண்டாடி படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் உருவாகி வருகின்றது. படகுப் போட்டியை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த மண்டாடி படத்தை சூரியின் விடுதலைப் படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மண்டாடி படம் குறித்து நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: