Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விறுவிறுப்பாக நடைபெறும் தனுஷின் இட்லி கடை பட பணிகள்… அப்டேட் இதோ!

Idly Kadai Movie Update: நடிகர் தனுஷ் தனது 52-வது படமான இட்லி கடை படத்தை தானே இயக்கி நடித்து உள்ளார். இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவதாக அப்டேட் வெளியாகியுள்ளது.

விறுவிறுப்பாக நடைபெறும் தனுஷின் இட்லி கடை பட பணிகள்… அப்டேட் இதோ!
இட்லி கடை Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Jun 2025 10:42 AM

நடிகர் தனுஷ் (Actor Dhanush) தமிழ் சினிமாவில் நடிகராக மட்டும் இன்றி இயக்குநராகவும் வலம் வருகிறார். அது மட்டும் இன்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என இவருக்கு சினிமாவில் பல அடையாளங்கள் உள்ளது. இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது. அதன்படி தனுஷின் இந்த இட்லி கடை படம் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டே திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால் படத்திற்கு தேவையான சில காட்சிகள் படமாக்கவேண்டும் என்ற காரணத்தால் படத்தின் வெளியீட்டை அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு படக்குழு ஒத்தி வைத்தது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளதால் படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருவதாகவும் பாதி படத்திற்கான பேக்ரவுண்ட் ஸ்கோர் வேலைகள் முடிந்துவிட்டதாகவும் மீதியும் விரைவில் முடிவடைந்துவிடும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

இட்லி கடை படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படம்:

நடிகர் தனுஷ் இறுதியாக தனது 50-வது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து இருந்தார். இந்த நிலையில் ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் படம் இட்லி கடை. இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ள நிலையில் நடிகர் அருண் விஜய் வில்லனாக நடித்துள்ளதாகவும், நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

முன்னதாக நடிகர் ராஜ்கிரணை வைத்து நடிகர் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் ராஜ்கிரணின் இளம் வயது கதாப்பாத்திரத்தை தனுஷ் ஏற்று நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தனுஷ் மீண்டும் எப்போது இயக்குநர் ஆவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது ராயன் படம்.

இப்படி தொடர்ந்து நாயகனாக மக்களை கவர்ந்தது மட்டும் இன்றி இயக்குநராகவும் தனது பணியை சிறப்பாக செய்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார் தனுஷ் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.