நெல்சன், லோகேஷ் பாணியில் பட தயாரிப்பில் களமிறங்கும் இயக்குநர் ஹெச்.வினோத்
Director H Vinoth: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் எச். வினோத். இவர் இயக்குநர்கள் நெல்சன் திலீப் குமார் மற்றும் லோகேஷ் கனகராஜ் பாணியில் படங்களை இயக்குவது மட்டும் இன்றி தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இருப்பவர் இயக்குநர் எச். வினோத். இவர் தற்போது நடிகர் தளபதி விஜயின் 69-வது படமான ஜன நாயகன் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது சினிமாவில் அடுத்த அவதாரத்தை எடுக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. அதன்படி அவர் இயக்குநராக மட்டும் இன்றி இனி படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் மாற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இவர் முதலாவதாக தயாரிக்கும் படத்தை இயக்குநர் பிரம்மா இயக்க உள்ளதாகவும் அந்தப் படத்திற்கான கதையை இயக்குநர் பிரம்மா உடன் இணைந்து இயக்குநர் எச். வினோத் எழுத உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இயக்குநர் பிரம்மா முன்னதாக நடிகை ஜோதிகா நடிப்பில் நாயகியை மையப்படுத்தி வெளியான மகளிர் மட்டும் என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச். வினோத் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன படம்:
இயக்குநர் எச். வினோத் நடிகர் நட்டி நடராஜன் நடிப்பில் 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ம் தேதி வெளியான சதுரங்க வேட்டை என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். சமூகத்தில் பேராசையால் ஏமாறும் மக்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்கி இருந்தார்.




இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாக பலரின் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் எச். வினோத் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இயக்கி இருந்தார். தனியாக இருக்கும் வீடுகளில் நடைபெறும் கொல்லை சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து இயக்குநர் எச். வினோத் நடிகர் அஜித் குமாரை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என மூன்று படங்களை வரிசையாக இயக்கினார். இந்த மூன்று படங்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதில் மூன்றாவதாக வெளியான துணிவு படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தை இயக்கும் எச். வினோத்:
இயக்குநர் எச். வினோத் தற்போது தமிழ் சினிமாவில் வராலாற்று நிகழ்வில் ஒரு பங்காக உள்ளார் என்று சொல்லாம். ஆம் தமிழ் சினிமாவை ஆதிக்கம் செய்யும் நடிகர் விஜய் தான் இறுதியாக நடிக்கும் படம் என்று சொன்ன ஜன நாயகனை இயக்குநர் எச். வினோத் தான் இயக்கி வருகிறார். படம் வருகின்ற ஜனவரி மாதம் 9-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
ஜன நாயகன் படத்தின் வெளியீடு குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
பொங்கலுக்கு வருகிறோம்!
ಸಂಕ್ರಾಂತಿಗೆ ಬರುತ್ತಿದ್ದೇವೆ!
సంక్రాంతికి వస్తున్నాం!
पोंगल पर आ रहे हैं!
പൊങ്കലിന് വരുന്നു!
09.01.2026 ❤️#JanaNayaganFromJan9#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju… pic.twitter.com/WIYOpyyQlN
— KVN Productions (@KvnProductions) March 24, 2025