Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தெலுங்கு சினிமாவில் கூலி படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்ற விஜய் பட தயாரிப்பாளர்!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கூலி. இந்தப் படத்தின் ஓடிடி உரிமை, திரையரங்கு வெளீட்டு உரிமைகள் குறித்து அடுத்தடுத்து அப்டேட் வெளியாகி வரும் நிலையில் தெலுங்கு சினிமாவில் திரையரங்க வெளியீட்டு உரிமையை விஜய் படத்தின் தயாரிப்பாளர் பெற்றுள்ளதாக தககவல்கள் தெரிவிக்கின்றது.

தெலுங்கு சினிமாவில் கூலி படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்ற விஜய் பட தயாரிப்பாளர்!
தில் ராஜூImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Jun 2025 19:52 PM

நடிகர் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பான் இந்திய நட்சத்திரங்களான நாகர்ஜுனா, அமீர் கான், சௌபின் ஷாகிர், உபேந்திரா ராவ், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கூலி படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. முன்னதாக படத்தில் இருந்து கிளிம்ஸ் வீடியோ மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவைப் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு உரிமை குறித்த தகவல்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தெலுங்கு திரையுலகில் கூலி படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்ற தில் ராஜூ:

தயாரிப்பாளர் தில் ராஜூ தெலுங்கு சினிமாவில் மிகப் பெரிய தயாரிப்பாளராக வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரிச்சையமானது விஜயின் வாரிசு படத்தை தயாரித்ததன் மூலம் தான். இந்தப் படத்தின் விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜூ பேசிய வீடியோ தற்போதும் ரசிகர்களிடையே பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் கேம் சேஞ்சர் படத்தை தயாரித்தது குறித்து பேசியது இணையத்தில் பேசு பொருளானது. அதன்படி இயக்குநர் சங்கர் உடன் இணைந்து பணியாற்ற எடுத்த முடிவு மிகவும் தவறானது என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தை தெலுங்கி சினிமாவில் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை இவர் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

கூலி படத்தின் முதல் சிங்கிளை வெளியிட்ட படக்குழு:

சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இந்த கூலி படத்தை தயாரித்து வரும் நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தில் இருந்து சிக்கிடு என்ற பாடலைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சிக்கிடு பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: