Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vijay Antony: விரைவில் ‘பிச்சைக்காரன் 3’.. விஜய் ஆண்டனி கொடுத்த மாஸ் அப்டேட்!

Vijay Antony About Pichaikkaran 3 Movie : தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் இசையமைப்பாளராக நுழைந்தவர் விஜய் ஆண்டனி. அதைத் தொடர்ந்து சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் மார்கன் படத்தின் தெலுங்கு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அடுத்ததாக பிச்சைக்காரன் 3 படத்தில் நடிக்கவுள்ளதாக அப்டேட் கொடுத்துள்ளார்.

Vijay Antony: விரைவில் ‘பிச்சைக்காரன் 3’.. விஜய் ஆண்டனி கொடுத்த மாஸ் அப்டேட்!
விஜய் ஆண்டனி Image Source: IMDb
barath-murugan
Barath Murugan | Published: 26 Jun 2025 15:10 PM

நடிகர் விஜய் ஆண்டனியின் (Vijay Antony) முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது.  சினிமாவில் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக நுழைந்த இவர், படங்களுக்கு இசையமைப்பதையும் தொடர்ந்து நடிப்பின் மீதும் ஆர்வம் காட்டினார். கடந்த 2012ம் ஆண்டு வெளியான நான் (Naan) என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதை தொடர்ந்து படங்களில் தொடர்ந்து நடிக்கவும் ஆரம்பித்தார். இந்நிலையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் மார்கன் (Maargan). இந்த படமானது திகில் குற்றக் கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது. இப்படமானது வரும் 2025, ஜூன் 27ம் தேதியில் ரிலீஸாக உள்ள நிலையில், ப்ரோமோஷன் (Promotion) பணிகள் தீவிரமாக நடைபெற்றுவந்தது.

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் 3 திரைப்படத்தைக் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். “பிச்சைக்காரன் 3 (Pichaikkaran 3) படமானது வரும் 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும்” என விஜய் ஆண்டனி கூறியுள்ளார். மேலும் அவர் சொன்னது பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

மார்கன் படத்தின் முதல் 6 நிமிட கடைசி குறித்து விஜய் ஆண்டனி வெளியிட்ட பதிவு :

பிச்சைக்காரன் 3 படம் குறித்து விஜய் ஆண்டனி கொடுத்திட அப்டேட் :

அந்த தெலுங்கில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனியிடம் தொடர்ந்து, 6 படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறீர்கள், நீங்கள் எப்போது படத்தை இயக்கவிருக்கிறீர்கள் ? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகர் விஜய் ஆண்டனி, “நான் பிச்சைக்காரன் 3 படத்தை இயக்கப்போகிறேன், அந்த படமானது வரும் 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும்” என்று பேசியிருந்தார். தற்போது இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஆண்டனி கொடுத்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பிச்சைக்காரன் 3 திரைப்படம் :

இயக்குநர் சசியின் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்திருந்த திரைப்படம் பிச்சைக்காரன். கடந்த 2016ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை சாத்னா டைட்டஸ் நடித்திருந்தார். அம்மா செண்டிமெண்ட் மற்றும் எமோஷனல் காட்சிகளுடன் இப்படம் வெளியாகி வெற்றி பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்ததாக விஜய் ஆண்டனி தனது சொந்த இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தற்போது விஜய் ஆண்டனி தனது கைவசத்தில் சுமார் 6 படங்களை வைத்துள்ளார். இந்த படத்ததைத் தொடர்ந்து, மீண்டும் தனது இயக்கத்தில் பிச்சைக்காரன் 3 படம் உருவாகும் என்று, அது வரும் 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் எனவும் நடிகர் விஜய் ஆண்டனி அப்டேட் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.