Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அமைதி, வளம் பெருக.. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்.. விஜய், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..

Krishna Jayanthi: கிருஷ்ணர் அவதரித்த நாளான கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை இன்று (ஆகஸ்ட் 16, 2025) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அமைதி, வளம் பெருக.. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்.. விஜய், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 Aug 2025 14:57 PM

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து, ஆகஸ்ட் 16, 2025: இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று இந்த கிருஷ்ண ஜெயந்தி ஆகும். கிருஷ்ண ஜெயந்தி என்பது கிருஷ்ணரின் பிறந்த நாளாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி என்பது இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 16ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் பலகாரங்கள் வைத்து சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்வார்கள். இதனை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் இல்லங்கள் தோறும் அமைதி வளம் பெறுக கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். கிருஷ்ண ஜெயந்தியை பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதுண்டு. வடமாநிலங்களை பொறுத்தவரையில் இது கிருஷ்ண ஜென்மாஷ்டமி என அழைப்பார்கள். அதேபோல் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இதனை கோகுலாஷ்டமி எனவும் அழைப்பார்கள். அதாவது ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் ரோகினி நட்சத்திர நாளில் கிருஷ்ணர் அவதரித்ததாக நம்பப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி:

கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தை இல்லாதவர்கள் விரதம் இருந்து வேண்டுதல் வைத்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் ஒவ்வொரு வீட்டிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை கிருஷ்ணரின் கால் தடம் பதித்து கிருஷ்ணருக்கு பிடித்தமான அனைத்து உணவுகளையும் நெய்வேத்தியமாக வைத்து வழிபடுவார்கள். கிருஷ்ணருக்கு வெண்ணெய், தயிர், பால், அவல் பாயசம், லட்டு, பொறி உள்ளிட்ட உணவுகளை நெய்வேத்தியமாக வைத்து வழிபடுவார்கள். குறிப்பாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் பெண் குழந்தையாக இருந்தாலும் ஆண் குழந்தையாக இருந்தாலும் கிருஷ்ணர் வேடமிட்டு மகிழ்வார்கள்.

த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து:


தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில், “ இல்லங்கள் தோறும் அமைதி, வளம் பெறுக, மகிழ்ச்சியுடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வாழ்த்து:


அதேபோல் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஆன எடப்பாடி பழனிசாமி, “ குழப்பத்தையும், தடுமாற்றத்தையும் தவிர்த்து, தெளிந்த நீரைப்போல் மனதை நிலைநிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால், ஒருவர் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று எல்லா சுகங்களும், மன நிம்மதியும் கிடைக்கப் பெற்றவராய் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடலாம்’ என்கிற கிருஷ்ண பகவானின் கீத உபதேசத்தை நாளும் மனதில்கொண்டு, கிருஷ்ண பகவான் அவதரித்த இத்திருநாளில், ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலைநாட்டிட உறுதியேற்போம்” என தெரிவித்துள்ளார்.