Keerthy Suresh: கீர்த்தி சுரேஷின் பர்த்டே.. அக்கா வெப் சீரிஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Akka Web Series: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து சினிமாவில் நாயகியாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் அக்கா என்ற வெப் தொடரானது உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (17/10/2026) கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் அதிகமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்துவருபவர் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh). இவர் மலையாள சினிமாவின் மூலமாக நடிகையாக நுழைந்து, தற்போது தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து பேக் டூ பேக் படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் டோரதி (Dorothy). இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj) இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், சிறப்பு வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த படமானது வெளியாகி மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்திற்கு பின் தமிழில் சத்யவான் சாவித்ரி மற்றும் தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் நாயகியாக நடித்துவருகிறார். மேலும் இவர் நெட்பிளிக்ஸ் ஓடிடி (Netflix OTT) நிறுவனத்தின் கீழ் நடித்துவந்த வெப் சீரிஸ்தான் அக்கா (Akka Web Series).
அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டியின் இயக்கத்தில் இந்த தொடரானது உருவாகிவரும் நிலையில், YRF என்டேர்டைமென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இன்று (17/10/2026) நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவரும் நிலையில், அதை முன்னிட்டு அக்கா வெப் தொடரின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: சொக்கத் தங்கம்.. மறைந்த இசையமைப்பாளர் தேவா குறித்து ரஜினிகாந்த் பேசிய வீடியோ!
கீர்த்தி சுரேஷின் அக்கா வெப் தொடர் ரிலீஸ்:
இந்த அக்கா வெப் சீரிஸை இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இயக்கியுள்ள நிலையில், நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிடுகிறார். இந்த சீரிஸில் கீர்த்தி சுரேஷ், ராதிகா அப்தே, தன்வி அஸ்மி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: மன்னன் நான் வந்தனா ஊர் அலற… ஒரு ஆண்டை நிறைவு செய்தது பிரதீப் ரங்கநாதனின் டியூட் படம்!
இதில் கீர்த்தி சுரேஷ் பவானி என்ற கதாபாத்திரத்திலும், ராதிகா ருத்ரா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்த அக்கா வெப் சீரிஸானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதியில் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.
கீர்த்தி சுரேஷின் அக்கா வெப் சீரிஸ் புதிய டீசர் குறித்து நெட்பிளிக்ஸ் வெளியிட்ட பதிவு:
Akka ki hukumat. Beheno ka raaj. Aur unpar khatre ka saaya 🐦🔥🔥 https://t.co/sF2mO7Wkvi
— Netflix India (@NetflixIndia) October 17, 2026
இந்த அக்கா வெப் சீரிஸானது பெண்களை மையமாக கொண்ட கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பெண் கேங்ஸ்டர்ஸ் மற்றும் ஆன்மிகம் கொண்ட கதைக்களத்தில் இந்த சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீரிஸ் 18+ சென்சார் தரத்தில் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் இந்த வெப் தொடர் வெளியாகிறது.