AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..

Rainfall Alert: அக்டோபர் 20ஆம் தேதியான இன்று, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Oct 2026 14:35 PM IST

அக்டோபர் 20, 2026: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இன்று (அக்டோபர் 20) சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி:

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மேலும், சுமார் 3.1 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடக்கு கடலோர ஆந்திரப் பகுதிகள் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்:

அக்டோபர் 20ஆம் தேதியான இன்று, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை பெய்யும் பகுதிகளில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 21 முதல் 23 வரை மழை நிலவரம்

அக்டோபர் 21ஆம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காரைக்கால் பகுதியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அக்டோபர் 22ஆம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு புகார்! திமுக பெண் நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

அக்டோபர் 23ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, அரியலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அக்டோபர் 26ஆம் தேதி வரை தொடரும் கனமழை:

அக்டோபர் 24ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

அக்டோபர் 25ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற பேபி சஹானா ரவி! ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்!

அக்டோபர் 26ஆம் தேதி சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.

நாளை (அக்டோபர் 21) சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.

 

Follow Us