AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு புகார்! திமுக பெண் நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

DMK Leader Sudha Booked : திமுக மகளிரணி சார்பில், கடந்த அக்டோபர் 7, 2026 அன்று நடைபெற்ற முப்பெரும் விழாவில்,திமுகவின் சென்னை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுதா தீனதயாளன் பேசிய போது, தமிழக முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு புகார்! திமுக பெண் நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
சுதா தீனதயாளன் - முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Oct 2026 11:53 AM IST

சென்னை, அக்டோபர் 18 : தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், திமுக (DMK) மகளிரணி நிர்வாகி சுதா தீனதயாளன் மீது சென்னை எஸ்பிளனேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தவெக நிர்வாகி உதயகுமார் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 7, 2026 அன்று சென்னையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் சுதா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில், கடந்த அக்டோபர் 7, 2026 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில், திமுகவின் சென்னை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுதா தீனதயாளன் பேசிய போது, தமிழக முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : ஆயுத பூஜை கூட்ட நெரிசல்: திருச்சி – சென்னை இடையே இன்று முன்பதிவில்லா சிறப்பு ரயில்

முப்பெரும் விழா நடைபெற்று சில நாட்களுக்குப் பிறகு, அந்த நிகழ்ச்சியில் சுதா தீனதயாளன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் முதல்வர் விஜய் குறித்து சுதா பேசியபோது அதைக் கேட்டு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சிரிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து சுதா தீனதயாளனின் பேச்சுக்கு எதிராக தவெக அமைச்சர்கள் கீர்த்தனா, ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

 முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு புகார்!

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை துறைமுகப் பகுதி தமிழக வெற்றிக் கழகச் செயலாளர் உதயகுமார், எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், அக்டோபர் 7, 2026 நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் சுதா தீனதயாளன் முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அவரது பேச்சு இரு தரப்பினரிடையே பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். எனவே, சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த சுதா தீனதயாளன் மீதும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திமுக நிர்வாகி முரளி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சுதா தீனதயாளன் மீது வழக்குப்பதிவு

தவெக நிர்வாகி உதயகுமார் அளித்த புகாரைத் தொடர்ந்து, சென்னை பூக்கடை காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பி-2 எஸ்பிளனேடு காவல் நிலைய போலீசார் சுதா தீனதயாளன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசிய கருத்துகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ மற்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிக்க : சென்னையில் இருந்து கோவா செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பெரும் பரபரப்பு!

பொதுநிகழ்ச்சியில் அரசியல் தலைவர்களை விமர்சித்துப் பேசுவது தொடர்பாக எழுந்துள்ள இந்த விவகாரத்தில், சுதா தீனதயாளன் அளிக்கும் விளக்கமும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தவெக நிர்வாகியின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக எஸ்பிளனேடு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us