“அடிக்க வெயிலுக்கு ஒரு பீர்” ஓடும் லாரியில் ஜாலியாக மது அருந்திய பிரியர்கள்.. கோவையில் அதிர்ச்சி நிகழ்வு!
Coimbatore Crime : கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஓடும் மின் கண்டெய்னர் லாரியின் பின் புறம் அமர்ந்திருக்கும் மது பிரியர்கள் சிலர் கையில் பீர் பாட்டிலை பிடித்தவாறு மது அருந்தியும், சிகரெட் புகைத்தவாறும் சென்ற அதிர்ச்சி காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
கோயம்புத்தூர் மாநகரத்தில் முக்கிய பகுதியான சாய்பாபா காலனியில் சென்று கொண்டிருந்த மினி கண்டெய்னர் லாரியின் பின்புறத்தில் மது பிரியர்கள் அமர்ந்து கொண்டு பீர் அருந்தியவாறு ஜாலியாக பயணம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர், சாய்பாபா காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படும். இந்த நிலையில், அந்த பகுதியில் மினி கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியின் பின்புறம் கண்டெய்னரின் கதவு ஒரு பக்கம் திறந்திருந்த நிலையில், அதில் உள்ளே அமர்ந்திருந்த மது பிரியர்கள் பீர் குடித்தவாறு ஜாலியாக பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் எந்தவித பாதுகாப்பு மற்றும் அச்சம் இன்றி லாரி சென்று கொண்டிருக்கும்போதே மது அருந்தி கொண்டிருந்தனர்.
மின் வேனின் பின் புறம் மது அருந்திய நபர்கள்
அது மட்டுமின்றி அவர்கள் கைகளில் பீர் பாட்டில்களை பிடித்தவாறு மது அருந்திய படியே பயணம் செய்தனர். அந்த சாலையில் கண்டெய்னர் லாரியின் பின்னால் காரில் வந்து கொண்டிருந்த நபர்கள் இந்த சம்பவத்தை பார்த்த நிலையில், தனது செல்போனில் அதனை வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் மது பிரியர்கள் ஜாலியாக மது அருந்துவது தெள்ளத் தெளிவாக பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க: ரூ.100 கோடி மெத்தபெட்டமைன் கடத்தல் கும்பலுடன் தொடர்பு.. இரு காவலர்கள் பணியிட மாற்றம்.. நாகை காவல்துறையில் பரபரப்பு!
சமூக வலைதளங்களில் வைரலாகு வீடியோ
மினி கண்டெய்னர் லாரியில் சரக்கு பொருட்களை ஏற்றி செல்வதற்கு பதிலாக, மது பிரியர்கள் அதனை நடமாடும் மதுபான பார் போல மாற்றி சென்ற இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் நிலையில் அதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளும் பிரதான சாலையில் விதிமுறைகளை முற்றிலும் உதாசீனப்படுத்திவிட்டு இந்த பயணம் மேற்கொண்டது கடும் எதிர்ப்புகளை கிளப்பி உள்ளது.
சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை தேவை
அத்துடன் பெண்கள், குழந்தைகள் செல்லும் சாலையில் இது போன்ற பகிரங்கமாக மது அருந்தி கொண்டு வாகனங்களில் செல்லும் சமூக விரோதிகள் மீது சம்பந்தப்பட்ட காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். இதே போல, தென்காசி மாவட்டத்தில் நகரப்பகுதியில் காரின் பின்புறத்தில் 3 பேர் அமர்ந்து கொண்டு பயணம் செய்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்திருந்தனர்.
மேலும் படிக்க: தமிழகத்தில் அடுத்தடுத்து சிக்கும் போதைப்பொருள்கள்.. திருநெல்வேலியில் 600 மாத்திரைகள் பறிமுதல்.. 4 பேரை மடக்கி பிடித்த போலீஸ்!