AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பேஷ், பேஷ்! அறிவுலகத்திற்கே ‘லீவு விட்ட’ அறிவார்ந்த ஆட்சி – டி.ஆர்.பி ராஜா காட்டம்..

TRB Rajaa: சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டி.ஆர்.பி. ராஜா, “ஆயுத பூஜைக்கு பெரியார் அறிவுலகத்திற்கே லீவு விட்டால் அறிவார்ந்த ஆட்சி! இன்றைய தமிழக வெற்றிக் கழக ஆட்சி. பேஷ், பேஷ்! ஆனால், அறிவாலயத்தில் கலைஞர் திறந்து வைத்த அண்ணா நூற்றாண்டு நூலகம் இன்றும் திறந்திருக்கிறது. அது சரி, அறிவுக்கு விடுமுறை விட்டிருக்கும் ஆட்சியில் இது அதிசயம் அல்லவே” என விமர்சித்துள்ளார்.

பேஷ், பேஷ்! அறிவுலகத்திற்கே ‘லீவு விட்ட’ அறிவார்ந்த ஆட்சி – டி.ஆர்.பி ராஜா காட்டம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Oct 2026 19:32 PM IST

அக்டோபர் 20, 2026: கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்திற்கு ஆயுத பூஜையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். விடுமுறை நாட்களில் நூலகங்களைத் திறந்து வைத்திருப்பது மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனக் குறிப்பிட்டு, தமிழக அரசின் நடவடிக்கையை அவர் விமர்சித்துள்ளார்.

அறிவுலகத்திற்கே லீவு விட்டால் அறிவார்ந்த ஆட்சி


இதுதொடர்பாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டி.ஆர்.பி. ராஜா, “ஆயுத பூஜைக்கு பெரியார் அறிவுலகத்திற்கே லீவு விட்டால் அறிவார்ந்த ஆட்சி! இன்றைய தமிழக வெற்றிக் கழக ஆட்சி. பேஷ், பேஷ்! ஆனால், அறிவாலயத்தில் கலைஞர் திறந்து வைத்த அண்ணா நூற்றாண்டு நூலகம் இன்றும் திறந்திருக்கிறது. அது சரி, அறிவுக்கு விடுமுறை விட்டிருக்கும் ஆட்சியில் இது அதிசயம் அல்லவே” என விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க: வடகிழக்கு பருவமழை: சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்! ரிப்பன் மாளிகையில் அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு

திமுக தொழில்நுட்பப் பிரிவும் கண்டனம்

இதே விவகாரம் தொடர்பாக திமுக தொழில்நுட்பப் பிரிவு சார்பிலும் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில்தான் மாணவர்களும் பெற்றோர்களும் அதிக அளவில் நூலகங்களுக்கும் அறிவியல் மையங்களுக்கும் வருவார்கள் என்ற அடிப்படைப் புரிதல் கூட அரசுக்கு இல்லையா எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், விடுமுறை நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் பெரியார் அறிவுலகத்தைப் பார்வையிட்டு, அதை உருவாக்கிய திராவிட மாடல் ஆட்சியையும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சாதனைகளையும் பாராட்டிவிடுவார்கள் என்ற அச்சமா என்றும் அந்த அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் அடுத்தடுத்து சிக்கும் போதைப்பொருள்கள்.. திருநெல்வேலியில் 600 மாத்திரைகள் பறிமுதல்.. 4 பேரை மடக்கி பிடித்த போலீஸ்!

கோவையில் பெரியார் அறிவுலகத்தைப் பார்வையிட வந்த மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளே செல்ல முடியாமல் தவிப்பதாகத் தகவல்கள் வருவதாகவும் திமுக தொழில்நுட்பப் பிரிவு தெரிவித்துள்ளது.

அறிவைப் போற்றும் நாளில் நூலகம் மூடப்பட்டதா?

மக்கள் அதிகம் வரும் விடுமுறை நாளிலேயே அறிவுலகத்தை மூடி வைத்திருப்பது என்ன வகையான நிர்வாகம் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பெரியாரைக் கொள்கைத் தலைவராகக் கூறிக்கொள்ளும் அரசு, பாஜகவின் கோட்பாடுகளைப் பின்பற்றுவதாக எழும் விமர்சனங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜயதசமி நாளில் குழந்தைகளுக்குக் கல்வியைத் தொடங்கி வைப்பதும், புத்தகங்களை வைத்து வழிபடுவதும் வழக்கமாக உள்ள நிலையில், அறிவைப் போற்றும் நாளில் நூலகத்தை மூடி வைத்திருப்பது ஏன் என்றும் திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

நூலகத்தைத் திறக்க வலியுறுத்தல்

பெரியார் அறிவுலகத்தை அன்றைய தினமே திறந்து பொதுமக்களையும் மாணவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் விடுமுறை நாட்களில் மாணவர்களின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் நூலகம் செயல்பட வேண்டும் என்றும் திமுக தொழில்நுட்பப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

Follow Us