AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திண்டுக்கல்லில் நடுரோட்டில் கொட்டிய 25,000 லிட்டர் ஆசிட்.. லாரி விபத்தால் ஏற்பட்ட கடுமையான புகைமூட்டம்.. பரபரப்பு!!

Dindigul Lorry Accident: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில், 25,000 லிட்டர் ஆசிட் நடுரோட்டில் கொட்டியது. இதனால் ஏற்பட்ட கடுமையான புகைமூட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிட் சாலையில் பரவிய சிறிது நேரத்தில் ஏற்பட்ட வேதியியல் தாக்கத்தால் அப்பகுதி முழுவதும் கடுமையான வெள்ளை நிறப் புகைமூட்டம் சூழ்ந்தது.

திண்டுக்கல்லில் நடுரோட்டில் கொட்டிய 25,000 லிட்டர் ஆசிட்.. லாரி விபத்தால் ஏற்பட்ட கடுமையான புகைமூட்டம்.. பரபரப்பு!!
லாரி விபத்து
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 15 Nov 2026 12:26 PM IST

திண்டுக்கல், நவ.15: தமிழ்நாட்டில் அடிக்கடி நிகழும் சாலை விபத்துகள் ஒருபுறம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், ஆபத்தான வேதிப்பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தூத்துக்குடியில் இருந்து கரூர் நோக்கி ஹைட்ரோகுளோரிக் (Hydrochloric) அமிலத்தை ஏற்றிச் சென்ற லாரியொன்று, அதிகாலை வேளையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் காரணமாக ஏற்பட்ட இத்தகைய கோர விபத்தால், லாரியிலிருந்த சுமார் 25,000 லிட்டர் ஆசிட் சாலையிலேயே கொட்டியது.

இதையும் படிக்க: ரேஷன் கடைகளில் காலிப் பணியிடங்கள்.. சுய உதவிக்குழு பெண்களை தற்காலிகமாக நியமிக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு!

வால்வு உடைந்து வெளியான நச்சுப் புகை:

லாரி பழுதாகிப் பின்னால் வந்த வாகனங்களின் மீது மோதிய வேகத்தில், அதன் பின்பக்க வால்வு உடைந்து வெளியேறிய ஹைட்ரோகுளோரிக் அமிலம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் பாய்ந்து ஓடியது. ஆசிட் சாலையில் பரவிய சிறிது நேரத்தில் ஏற்பட்ட வேதியியல் தாக்கத்தால் அப்பகுதி முழுவதும் கடுமையான வெள்ளை நிறப் புகைமூட்டம் சூழ்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் பெரிய அளவில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டாலும், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளுக்கும் அருகில் வசிப்பவர்களுக்கும் தொண்டை அரிப்பு மற்றும் கண் எரிச்சல் ஏற்படும் அபாயம் உருவாகியது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் அச்சமும் தொற்றிக் கொண்டது.

தீயணைப்புத் துறையினரின் விரைவான மீட்புப் பணிகள்:

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன், திண்டுக்கல் தீயணைப்புத் துறையினரும் தாடிகொம்பு காவல் துறையினரும் உடனடியாக விரைந்து வந்து மீட்புப் பணிகளில் களமிறங்கினர். சாலையில் கொட்டிக்கிடந்த ஆசிட்டின் வீரியத்தைக் குறைக்கக் கூடுதல் தண்ணீரைத் தொடர்ந்து பீய்ச்சி அடித்து அதன் வெப்பத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், புகை பரவுவதைத் தடுத்த தீயணைப்புத் துறையினர், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் வாகனப் போக்குவரட்டை முழுமையாகத் தடுத்து மாற்றுப் பாதைகளுக்குத் திருப்பி விட்டனர். இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தொடர்ந்து அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு நிலைமை முழுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: ஜெம் வீரமணி வீட்டில் சிறுமி சடலம் புதைப்பு.. கற்பழித்து கொலையா? ஜேசிபி மூலம் தோண்டும் பணி தீவிரம்!

காவல்துறையின் தீவிர விசாரணையும் தற்போதைய நிலை:

தற்போது நிலைமை முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்குப் பெரிய அளவிலான உடல் உபாதைகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய லாரி சாலையோரமாகப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்துத் தாடிகொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆபத்தான இரசாயனங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உரிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமாறு சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரும் நிலையில், திண்டுக்கல்லில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

Follow Us