AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சேலத்தில் அதிர்ச்சி.. மதுவால் பறிபோன மூதாட்டி உயிர்.. சுவரில் தலையை மோதி கொன்ற கொடூர பேரன் கைது!

Salem Murder : சேலம் மாவட்டத்தில் மது அருந்துவதற்கு பணம் தர மறுத்த மூதாட்டியை அவரது பேரன் சுவற்றில் மோதி கொலை செய்தார். இது தொடர்பாக கொண்டாலம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து அந்த இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் .

சேலத்தில் அதிர்ச்சி.. மதுவால் பறிபோன மூதாட்டி உயிர்.. சுவரில் தலையை மோதி கொன்ற கொடூர பேரன் கைது!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 29 Sep 2026 20:07 PM IST

சேலம் மாவட்டம், பெரிய புத்தூர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள். இவரது பேரன் விஜி. இவர், வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தவறான நண்பர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக இவருக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக, தனது பாட்டியிடம் அவ்வப்போது மது அருந்துவதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வருவாராம். அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை காலை வழக்கம் போல மது அருந்துவதற்கு தனது பாட்டி பழனியம்மாளிடம் பணம் கேட்டு விஜி தொந்தரவு செய்துள்ளார். அப்போது. பழனியம்மாள் பணம் தர மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், அவருக்கும் பேரன் விஜிக்கும் இடையே வாய் தவறாக ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த விஜி, பாட்டி என்றும் பாராமல் கொடூரமாக தாக்கியுள்ளார்.

பாட்டியின் தலையை பிடித்து சுவறில் மோதிய பேரன்

ஒரு கட்டத்தில் பாட்டியின் தலையை பிடித்து சுவரின் மீது பலமாக மாறி மாறி மோதியுள்ளார். இதில், பலத்த ரத்த காயம் அடைந்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் மயக்கம் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். தொடர்ந்து, அக்கம், பக்கத்தில் இருப்பவர்கள் பழனியம்மாளின் வீட்டின் கதவு வெகு நேரமாக திறந்து கிடப்பதை பார்த்து சந்தேகம் அடைந்துள்ளனர். உடனே, உள்ளே சென்று பார்த்தபோது மூதாட்டி பழனியம்மாள் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

மேலும் படிக்க: https://www.tv9tamilnews.com/tamil-nadu/traffic-diversions-implemented-in-dharapuram-due-to-chief-minister-vijay-campaign-108727.html

ரத்த வெள்ளத்தில் மயங்கி உயிரிழந்த மூதாட்டி

உடனே, அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பழனியம்மாள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, அவரது சடலம் உடல்கூறாய்வு மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த கொண்டாலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தலைமறைவாக இருந்த பேரன் அதிரடி கைது

தொடர்ந்து, இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், கொண்டாலம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், மது அருந்துவதற்கு பணம் தர மறுப்பு தெரிவித்த பாட்டியை, பேரன் தாக்கி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. அதன்படி, தலைமறைவாக இருந்து வந்த விஜியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்.. யார் யாருக்கு என்ன பொறுப்பு!

Follow Us