AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தவெக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் விஜய் பரப்புரை.. தாராபுரத்தில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரம்!

Dharapuram Traffic Diversion : தாராபுரம் தொகுதியில் முதல் அமைச்சர் சி. ஜோசப் விஜய் நாளை பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில், நெரிசலை குறைப்பதற்காக குறிப்பிட்ட இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை போலீசார் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர் .

தவெக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் விஜய் பரப்புரை.. தாராபுரத்தில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரம்!
போக்குவரத்து மாற்றம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 29 Sep 2026 19:39 PM IST

தமிழகத்தில் அடுத்த மாதம் 6- ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி இடதுசாரிகள் என 5 முனைப்போட்டி நிலவி வருகிறது. இந்த இரு தொகுதிகளில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டவர்களை ஆதரித்து கட்சியின் தலைவர்கள் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தாராபுரம் தொகுதியில் சத்யபாமா வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவு கோரி தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜய் நாளை புதன்கிழமை ( செப்டம்பர் 30- ஆம் தேதி) தீவிர பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக தாராபுரம் பகுதியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாராபுரம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

இதில், சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் அதிக அளவு பொதுமக்கள் வந்து செல்வார்கள். இதனால், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு மற்றும் இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து பேருந்துகள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இதில், ஒட்டன்சத்திரம் வழியாக வரும் வாகனங்கள் உடுமலைப்பேட்டை- பொள்ளாச்சி வழியாக செல்ல வேண்டும்.

மேலும் படிக்க: தவெக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு.. எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சால் ஷாக்.. குபீரென கைத்தட்டி சிரித்த சத்யபாமா!

கரூர் வழியாக செல்லும் வாகனங்கள்

இதே போல, கரூர் வழியாக வரும் வாகனங்கள் பழனி- பொள்ளாச்சி வழியாக செல்ல வேண்டும். திருப்பூரில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு மாற்று பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் ஜோசப் விஜயின் பிரச்சார வாகனம் செல்லும் போது ஒரு சில இடங்களில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, போக்குவரத்து போலீசாரின் இந்த போக்குவரத்து மாற்ற அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இடைத்தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் 5 கட்சிகள் சார்பில் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக கட்சியின் தலைவர், அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த தேர்தல்களை காட்டிலும், இந்த இடைத்தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தாராபுரம் மக்களை சாந்தப்படுத்த.. “எனக்கு வேற வழி தெரியல ஆத்தா” வேட்பாளர் சத்யபாமா எடுத்த டெக்னிக்!

Follow Us