ஜெயிலர் 2 படத்திலிருந்து வெளியானது பிந்தாஸ் பாடலின் லிரிக்கள் வீடியோ!
Bindaas Lyric Video From Jailer 2 Movie | நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ரசிகர்கள் தற்போது அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் வீடியோ தற்போது வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் நெல்சன் திலீப் குமார். இவர் கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். அதற்கு முன்பு சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் பெரும்பாலும் ஆக்ஷன் மற்றும் டார்க் காமெடி பாணியில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இவரது இயக்கத்தில் இறுதியாக ஜெயிலர் படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியானது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டம் பாகத்தையும் உருவாக்கி உள்ளார்.
இந்த ஜெயிலர் 2 படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து பான் இந்திய நட்சத்திரங்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் வருகின்ற 15-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.




ஜெயிலர் 2 படத்திலிருந்து வெளியானது பிந்தாஸ் பாடல் வீடியோ:
மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து முன்னதாக மூன்று பாடல்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தில் இருந்து தற்போது 4-வது லிரிக்கள் வீடியோவான பிந்தாஸ் என்ற பாடல் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி சிறப்பு நடனம் ஆடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
Also Read… வெளியானது ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் 3 நிமிட காட்சி… கொண்டாடும் ரசிகர்கள்
ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Time to go mad with #Bindaas 🔥💃 It’s out now! 🎶#Jailer2
▶️ https://t.co/NXSmlAVhby@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial #NoraFatehi @masakakids @vidya_balan @iam_SJSuryah #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts… pic.twitter.com/mWvVMs2MDI
— Sun Pictures (@sunpictures) September 30, 2026
Also Read… பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸிலிருந்து வெளியேறிய குமரன் – வைரலாகும் வீடியோ!