Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Nelson Dilipkumar: வெற்றிமாறன் தயாரித்ததிலே மிகவும் வித்தியாசமான படம்… மாஸ்க் படத்திற்கு விமர்சனம் கொடுத்த நெல்சன் திலீப்குமார்!

Nelson Dilipkumar About Mask Movie: இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் சமீபத்தில் நடிகர் கவினின் மாஸ்க் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய இவர், இப்படத்திற்கு விமர்சனம் கொடுத்துள்ளார். இது குறித்து பார்க்கலாம்.

Nelson Dilipkumar: வெற்றிமாறன் தயாரித்ததிலே மிகவும் வித்தியாசமான படம்… மாஸ்க் படத்திற்கு விமர்சனம் கொடுத்த நெல்சன் திலீப்குமார்!
நெல்சன் திலீப்குமார்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 10 Nov 2025 20:11 PM IST

கோலிவுட் சினிமாவில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் ரஜினிகாந்த் (Rajinikanth) வரை உச்ச நடிகர்களின் திரைப்படங்களை இயக்கி வெற்றி கொடுத்தவர்தான் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar). இவர் நயன்தாராவின் நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படமானது இவருக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்திருந்த நிலையில், இதை அடுத்ததாக டாக்டர் மற்றும் பீஸ்ட் போன்ற திரைப்படங்களையும் இயக்கி வெற்றி கொடுத்திருந்தார். இவரின் இயக்கத்தில் இறுதியக வெளியான படம் ஜெயிலர். கடந்த 2023ம் ஆண்டில் இப்படமானது வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்றியிருந்த நிலையில், இதை அடுத்ததாக ஜெயிலர் 2 (Jailer 2) திரைப்படத்தை இயக்கிவருகிறார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் ஹீரோவாக நடித்துவரும் நிலையில் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் இருக்கிறது. இவர் சிலம்பரசனின் அரசன் (Arasan) பட ப்ரோமொஷவில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்றிருந்த மாஸ்க் பட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக இவர் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய நெல்சன் திலீப்குமார், மாஸ்க் (Mask) திரைப்படம் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆண்ட்ரியா ஒரு அழகான சிலை… வர்ணித்து பேசிய விஜய் சேதுபதி!

மாஸ்க் திரைப்படத்திற்கு விமர்சனம் கொடுத்த நெல்சன் திலீப்குமார்:

அந்த நிகழ்ச்சியில் பேசிய நெல்சன் திலீப்குமார், “இந்த மாஸ்க் மாதரியான பெரிய கதையை யோசித்ததே பெரிய விஷயம், மேலும் இயக்குநர் விகர்ணன் இந்த கதையை வெற்றிமாறனிடம் சொல்லி சம்மதிக்கவைத்தது அதைவிடவும் பெரிய விஷயம். நிறையதடவை நானும் கவினும் இந்த மாஸ்க் படத்தை பற்றி பேசுவம், அவரும் என்னிடம் இப்படத்தை பற்றி நிறையா சொல்லுவாரு. இப்படத்தை பற்றி அவர் சொல்லும்போது, நான் நினைத்தது என்னெவென்றால், இப்படத்தில் உள்ள கதைக்களம் எல்லாமே மிகவும் புதியதாக இருந்தது. ஏன் நமக்கு இப்படியெல்லாம் ஒரு யோசனை வரவில்லை என்று நினைத்திருக்கிறேன்.

இதையும் படிங்க: ‘அனுபாமாவின் மார்பிங் போட்டோ லீக்’.. சிக்கிய தமிழகத்தை சேர்ந்த 20 வயது இளம் பெண்!

மாஸ்க் திரைப்படம் குறித்து நெல்சன் திலீப்குமார் பேசிய வீடியோ பதிவு :

பின் நல்ல வேளை இப்படியெல்லாம் யோசனை வரவில்லை என்றும் நினைத்திருக்கிறேன். இந்த படத்தில் டார்க் காமெடி காட்சிகள் எல்லாம் நல்லாவே வந்திருக்கிறது. இந்த படத்தில் சில காட்சிகளை பார்த்திருக்கிறேன், அதை பார்க்கும்போது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அனைவருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். மேலும் இதுவரை வெற்றிமாறன் சாரின் தயாரிப்பில் வெளியான படங்களில் அது ஒரு சமூக கருத்துக்கொண்ட கதியாக இருக்கும், ஆனால் முதல் முறையாக அவர் மக்களுக்கான ஒரு நகைச்சுவை எண்டர்டெயின்மெண்ட் கதைக்களம் கொண்ட படத்தை தயாரித்திருக்காரு” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.