Dude Movie: வெற்றிகரமாக திரையரங்குகளில் 25 நாட்களை கடந்த டியூட்.. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!
Dude Movie 25th Day Special Poster: கீர்த்திஸ்வரன் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளியான படம்தான் டியூட். கடந்த 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளி பண்டிகையில், தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. இந்த படம் வெளியாகி இன்றுடன் 25 நாட்களான நிலையில் ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) PR04 என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட படம்தான் டியூட் (Dude). இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 மார்ச் மாதத்தில் தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குள் நிறைவடைந்து, வெளியீட்டிற்கு தயாராகியிருந்தது. அதன்படி இப்படம் 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ (Mamitha Baiju) முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படமானது இந்த 2கே கிட்ஸ் காதல் கதைக்களத்தில் மிக பிரம்மாண்டமாகவும், வித்தியாசமாகவும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர்கள் ஹிருது ஹாரூன், சரத்குமார், ரோகிணி போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சங்களை பெற்றிருந்தாலும், வெளியான 1 வாரத்தில் சுமார் ரூ 100 கோடிகளை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்திருந்தது.
இந்த படத்திற்கு பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்திருந்தாலும், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஹிட்டடிதாது. இந்த படமானது இன்றுடன் 2025 நவம்பர் 10ம் தேதியுடன் வெளியாகி 25 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான பதிவும் இணையத்தில் வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க: வெற்றிநடைபோடும் பைசன் காளமாடன் படம் – கொண்டாட்டத்தில் படக்குழு
25 நாட்களை நிறைவு செய்த நிலையில் டியூட் படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர் பதிவு :
BLOCKBUSTER 25th DAY for the CULTURAL STORM #DUDE ❤🔥
Book your tickets for #Dude now 🔥
🎟️ https://t.co/JVDrRd4PZQ⭐ing ‘The Sensational’ @pradeeponelife
🎬 Written and directed by @Keerthiswaran_
Produced by @MythriOfficial
Music by… pic.twitter.com/DDUamnJ696— Mythri Movie Makers (@MythriOfficial) November 10, 2025
டியூட் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு:
இந்த டியூட் படமானது திரையரங்குகளில் வெளியாக 25 நாட்களை கடந்த நிலையில் ஓடிடியில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமானது பெற்றிருந்த நிலையில், எப்போது வெளியாகவும் என ஓடிடி ரசிகர்கள் கேட்டுவந்தனர். அந்த வகையில் அதிரடி காதல், எமோஷனல் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இப்படம் வரும் 2025 நவம்பர் 14ம் தேதி முதல் ஓடிடியில் வெளியாகவுளளதம்.
இதையும் படிங்க : ஓடிடியை தெரிவிக்கவிட காத்திருக்கும் பிரதீப் ரங்கநாதனின் டியூட்… எந்த ஓடிடியில்.. எப்போது பார்க்கலாம்?
இப்படம் தற்போதும் சில திரையரங்குகளில் வெளியாகிவரும் நிலையில், ஓடிடியில் 1 மாதத்திற்கு முன்னே வெளியாகவுள்ளது. இது தற்போது திரைப்பட ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. 1 மாதத்திற்குள் எப்படி ஓடிடியில் படங்கள் வெளியாகிறது என தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூவின் காம்போவில் வெளியான இப்படம் ஓடிடியில் வெளியான பிறகும் மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.