டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2-வின் வெற்றியாளர் இவர்தான்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்
Top Cooku Dupe Cooku Season 2: தமிழ் சின்னத்திரையில் தொடர்ந்து பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி டாப் குக்கு டூப் குக்கு.
சின்னத்திரையில் தொடர்ந்து சீரியல்கள் மட்டும் இன்றி பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து சின்னத்திரையில் பாடல் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, காமெடி நிகழ்ச்சி என ஒளிபரப்பாகி வந்த நிலையில் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் சின்னத்திரையில் முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் தான் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் காமெடி கலந்த சமையல் போட்டி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த குழு அப்படியே சன் டிவியில் சென்று புதிதாக ஒரு நிகழ்ச்சியை தொடங்கியது. இதன் காரணமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற தவறியது.
கடந்த இரண்டு சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடர்ந்து பல நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் வெளியான டாப் குக்கு டூப் குக்கு கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. அதன்படி முதல் சீசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து கடந்த 17-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2 தொடங்கியது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.




டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2-வின் வெற்றியாளர் இவர்தான்:
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பெசன்ட் ரவி, ப்ரீத்தா, டெல்னா டேவிஸ், கிரண், வாஹேசன், ஷிவானி, டிஎஸ்ஆர், பிரியங்கா, ரோபோ சங்கர் என மொத்தம் 9 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையில் இன்று ஃபைனல்ஸ் நடைப்பெற்றது. அதில் பெசன்ட் ரவி வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… AK64-ல் அஜித் குமார்- ஸ்ரீலீலா ஜோடி உறுதி… வைரலாகும் வீடியோ!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
The Title Winner Is Here🔥
TOP COOKU DUPE COOKU – SEASON 2 GRAND FINALE#SunTV #TopCookuDupeCooku #TopCookuDupeCookuOnSunTV #RenduDhanTrendu #SunDigital pic.twitter.com/Rw0pEBSU2w
— TGS Tamilan Chinnathirai (@TgsTamilThirai) December 14, 2025
Also Read… ரஜினியின் பிறந்தநாளில் வராத அப்டேட்.. தலைவர்173 படத்தின் அறிவிப்பு எப்போது தெரியுமா?