ஆந்திரா சாப்பாடு என்றால் அனிருத்துக்கு ரொம்ப பிடிக்குமாம்! சென்னையில் அவருக்கு மிகவும் பிடித்த உணவகம் எது தெரியுமா?
Anirudh's Favourite Food: சமீபத்தில் Mashable India-க்கு அளித்த பேட்டியில், சென்னையில் அனைவரும் கட்டாயம் சென்று சாப்பிட வேண்டிய உணவகங்கள் எவை என்று அனிருத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், சென்னையில் உள்ள நேஷனல் லாட்ஜ் (National Lodge) உணவகத்தைப் பரிந்துரைத்தார்.
நவம்பர் 21, 2026: இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திகள் தொடர்ந்து கவனம் பெற்று வரும் நிலையில், சென்னையில் தனக்குப் பிடித்த உணவகம் மற்றும் உணவு விருப்பங்கள் குறித்து அனிருத் பகிர்ந்துள்ள தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
அனிருத் ரவிச்சந்தர், காவ்யா மாறன் இருவரும் கடந்த நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சென்னை திரும்பிய புதுமணத் தம்பதியினர், இன்று (நவம்பர் 21) நடைபெற உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது திருமணம் மற்றும் திரையுலகில் அனிருத்தின் இசைப் பயணத்திற்கு மத்தியில், அவருடைய உணவுப் பழக்கங்கள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.
அனிருத்துக்கு மிகவும் பிடித்த உணவகம் எது?
சமீபத்தில் Mashable India-க்கு அளித்த பேட்டியில், சென்னையில் அனைவரும் கட்டாயம் சென்று சாப்பிட வேண்டிய உணவகங்கள் எவை என்று அனிருத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், சென்னையில் உள்ள நேஷனல் லாட்ஜ் (National Lodge) உணவகத்தைப் பரிந்துரைத்தார்.
மேலும் படிக்க: இதில் பல நாள் கண்ட சுகமே.. ஆண் குழந்தைக்கு தாயான நடிகை சமந்தா – பெயர் என்ன தெரியுமா?
இதுகுறித்து பேசிய அவர், “இது மிகவும் பழமையான உணவகம். இப்போதும் எப்போதும் வாடிக்கையாளர்களால் நிரம்பியிருக்கும். இது எனக்கு மிகவும் பிடித்த உணவகம். இங்கு கிடைக்கும் காரமான ஆந்திர உணவுகளை அனைவரும் சுவைத்துப் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், அனிருத் சைவ உணவுகளை மட்டுமே விரும்பிச் சாப்பிடுபவர் என்றும், குறிப்பாக காரசாரமான ஆந்திர உணவுகள் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
1952ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நேஷனல் லாட்ஜ்!
சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் அமைந்துள்ள நேஷனல் லாட்ஜ் உணவகம், பல தசாப்தங்களாக பாரம்பரிய ஆந்திர சைவ உணவுகளை வழங்கி வருகிறது. கடந்த 1952ஆம் ஆண்டு கோட்டா எஹிராஜுலு என்பவரால் இந்த உணவகம் தொடங்கப்பட்டது. அப்போது சென்னை ஜார்ஜ் டவுன் முக்கியமான வணிக மையமாக விளங்கியதுடன், தெலுங்கு பேசும் மக்களும் அதிக அளவில் வசித்து வந்தனர்.
மேலும் படிக்க: இரத்த உறவையும் தாண்டிய தந்தை பாசம்.. விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படம் எப்படி இருக்கு?
இந்த உணவகத்தின் ஆந்திரா சாப்பாட்டில் தாளிப்பு காய்கறிகள், அப்பளம், பருப்பு, சட்னி, தயிர் பச்சடி உள்ளிட்ட பல வகையான உணவுகள் இடம்பெறும். குறிப்பாக பருப்பு பொடி எனப்படும் கன் பவுடர், சாதத்துடன் நெய் கலந்து சாப்பிடுவதற்கு மிகவும் பிரபலமானது. இதுதவிர ரசம், புளுசு, தயிர் சாதம் உள்ளிட்ட உணவுகளும் வழங்கப்படுகின்றன. இறுதியாக காரமான வறுத்த மிளகாய் பரிமாறப்படுவதும் இதன் சிறப்பம்சமாகும்.