Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எடப்பாடி-நயினார் நாகேந்திரன் நாளை சந்திப்பு…முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!

Nainar Nagendran Meet Edappadi K. Palaniswami: சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் என்னென்ன ஆலோசிக்கப்பட உள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகி உள்ளது.

எடப்பாடி-நயினார் நாகேந்திரன் நாளை சந்திப்பு…முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!
எடப்பாடி நயினார் நாகேந்திரன் நாளை சந்திப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 08 Jan 2026 17:52 PM IST

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக கடந்த ஏப்ரல் மாதமே அதிமுக -பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது தொகுதி பங்கீடு உள்ளிட்டவை தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று புதன்கிழமை (ஜனவரி 8) பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுக- பாஜக கூட்டணியில் பாமக இணைவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தொகுதி பங்கீடு, கூட்டணியை வலுப்படுத்துதல், டி. டி. வி. தினகரன், சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி-நயினார் நாகேந்திரன் சந்திப்பு

அதன்படி, எடப்பாடி கே. பழனிசாமியை சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது வீட்டில் நாளை வெள்ளிக்கிழமை ( ஜனவரி 9) காலை 9 மணிக்கு நயினார் நாகேந்திரன் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பில், அதிமுக பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு, தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல கட்சிகளை இணைப்பது, தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்துவது, இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதால் கூட்டணியை இறுதி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: “அன்புமணி யாருடன் கூட்டணி சேர்ந்தாலும், யாரும் அவருக்க ஓட்டு போட மாட்டார்கள்”.. ராமதாஸ் பளார்!!

திமுகவை வீழ்த்துவதற்காக…

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக கட்சியை தேர்தலில் தோற்கடிப்பதற்காக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், அதிமுக- பாஜக கூட்டணியில் பாமக ஐக்கியமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, டெல்லி சென்று வந்த எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக பாஜக மாநில தலைவருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

தேர்தல் பணிகளில் தேஜ கூட்டணி தீவிரம்

இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி வருகைக்கு முன்னதாக கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்தையும் முடித்து, கன்னியாகுமரியில் நடைபெறும் தாமரை மகளிர் மாநாட்டில் கூட்டணி கட்சித் தலைவர்களை பிரதமர் மோடி முன்பு மேடையில் உரையாற்ற வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே, தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருவதை பார்க்கமுடிகிறது.

மேலும் படிக்க: அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவுக்கு நோ.. கூட்டணியில் டிடிவி? மறுக்காத இபிஎஸ்!!