Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக ஆட்சியில் 85% தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்…அமைச்சர் கே.என்.நேரு!

Minister K N Nehru : திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .

திமுக ஆட்சியில் 85% தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்…அமைச்சர் கே.என்.நேரு!
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் 85% நிறைவேற்றம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 08 Jan 2026 16:42 PM IST

கடந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் எம். பி. க்கள் எதன் அடிப்படையில் குரல் கொடுக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தங்களது கூட்டணியை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், திமுக கூட்டணி எப்போதும் வலுவாக உள்ளது. கனிமொழி எம். பி. தலைமையிலான குழு திமுகவின் தேர்தல் அறிக்கைக்காக மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து வருகிறது.

மக்கள் எதிர்பார்ப்பு போல திமுக தேர்தல் வாக்குறுதிகள் அமையும்

திருச்சிக்கு அந்த குழு வரும்போது மக்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்படும். மக்கள் எதிர்பார்ப்பதை போல திமுகவின் தேர்தல் அறிக்கை அமையும். கடந்த 2021- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுக அறிவித்த 504 தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதை தவிர்த்து, தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: “அன்புமணி யாருடன் கூட்டணி சேர்ந்தாலும், யாரும் அவருக்க ஓட்டு போட மாட்டார்கள்”.. ராமதாஸ் பளார்!!

மக்களின் கனவுகளை நிறைவேற்றும் அரசு

மத்திய அரசு நிதி அளிக்காத நிலையில், தமிழக அரசு நிதி நெருக்கடியில் இவ்வளவு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட படி பழைய ஓய்வூதிய திட்டம், பொங்கல் பரிசு தொகை ரூ. 3000, மாணவர்களுக்கான லேப்டாப் உள்ளிட்டவற்றை முதல்வர் மு. க. ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். இதே போல, மக்களின் கனவு என்ன என்பதை கேட்டறிந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெற்று உங்களின் கனவுகளை நிறைவேற்றித் தருகிறோம் எனக் கூறி, மக்களின் கனவுகளை கேட்டறிந்து வருகிறது.

மக்களுக்காக திமுக அரசு உள்ளது

இந்த கனவு திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் நாளை வெள்ளிக்கிழமை ( ஜனவரி 9) தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆதாரம் இன்றி குறை கூறி வருகின்றது. எனவே, முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியது போல, மக்கள் தங்களுடைய வேலைகளை பார்க்க வேண்டும். மக்களுக்காக முதல்வரும், திமுக அரசும் உள்ளது.

சென்சார் போர்டுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை

விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு சென்சார் போர்டு அனுமதி வழங்கினால், அந்த அனுமதியே, படக்குழுவினர் பெற வேண்டும். சென்சார் போர்டானது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை. கடந்த அதிமுக ஆட்சியிலும் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று உள்ளன என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: அமலாக்கத்துறை பற்ற வைத்த நெருப்பு…களமிறங்கிய லஞ்ச ஒழிப்பு துறை…விசாரணை வளையத்தில் அமைச்சர் கே.என்.நேரு?