AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழ் ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடிக்கும் நடிகை.. இந்த கியூட் சிறுமி யார் தெரியுமா?

Tamil Actress Childhood Photo: சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் அவ்வப்போது நடிகர்கள், நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும். அந்த விதத்தில் இந்த போட்டோவில் இருக்கும் சிறுமி யாரை தெரியுமா? தமிழ் டூ மலையாளம் சினிமாவில் உச்ச நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் இவர், யாரென விவரமாக பார்க்கலாம்.

தமிழ் ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடிக்கும் நடிகை.. இந்த கியூட் சிறுமி யார் தெரியுமா?
தமிழ் நடிகையின் சிறுவயது புகைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 08 Sep 2026 08:14 AM IST

சோசியல் மீடியாவில் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த விதத்தில் மேலே இருக்கும் போட்டோவில் இருக்கும் சிறுமி யார் தெரியுமா?. இவர் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவில் (Tamil Cinema) நடிகையாக நுழைந்தவர். அசாம் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இவர், கன்னட சினிமாவின் மூலம் நாயகியாக நுழைந்தார். கல்லூரி காலங்களில் மாடலிங் மற்றும் நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட நிலையில், சிறு சிறு குறும்படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2021ம் ஆண்டு முதல் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். இந்த படமானது இவருக்கு முதல் அறிமுகத்தை கொடுத்தது. இந்த படத்திற்கு பின் இயக்குநர் வினயன் (Vinayan) இயக்கத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். இது இவருக்கு முதல் வரவேற்பை கொடுத்த படமாக அமைந்தது.

மேலும் தமிழில் 2025ம் ஆண்டில் அஸ்வத் மாரிமுத்துவின் (Ashwath Marimuthu) இயக்கத்தில், நாயகியாக தமிழ் சினிமாவில் நுழைந்தார். தற்போது சூர்யா (Suriya) முதல் துல்கார் சல்மான் (Dulquer Salmaan) போன்ற பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் படங்களில் இணைந்துள்ளார். இப்போது தெரிந்திருக்கும் என நினைக்கிறேன், அட இந்த சிறுமி வேறு யாருமில்லை நடிகை கயாடு லோஹர்தான் (kayadu Lohar).

இதையும் படிங்க: தமிழ் சினிமாவின் உண்மையான எண்டர்டெயினர் கே.எஸ்.ரவிக்குமார்… கொண்டாடும் ரசிகர்கள்!

நடிகை கயாடு லோஹரின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by kayadulohar (@kayadu_lohar_official)

நடிகை கயாடு லோஹரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற திரைப்படங்களில் நாயகியாக நடித்துவருகிறார். நடிகை 2021ம் ஆண்டில் கன்னடத்தில் வெளியான முகில்பேட் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படமானது இவருக்கு சினிமா அறிமுகத்தை கொடுத்தது. 2022ம் ஆண்டில் இயக்குநர் வினயன் இயக்கத்தில் வெளியான பத்தொன்பதாம் நூற்றாண்டு என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் நுழைந்தார். மேலும் இதன் பின் தெலுங்கு போன்ற மொழியிலும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: அவர் சொன்னதைச் செய்பவர்.. முதல்வர் விஜய் கற்றுத்தந்த பாடம் குறித்து பேசிய மாளவிகா மோகனன்!

மேலும் இவருக்கு தமிழில் முதல் படமாக அமைந்தது டிராகன். இதை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க, பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் கயாடு லோஹருக்கு பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படம் இவருக்கு மாபெரும் வரவேற்பை கொடுக்க, அடுத்தடுத்த தமிழில் நடித்திருந்தார். இவரின் நடிப்பில் தமிழில் இம்மார்ட்டல் மற்றும் இதயம் முரளி போன்ற படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் தமிழில் சூர்யா48 மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மஞ்சணத்தி போன்ற படங்களில் நாயகியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us