AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஓடிடியில் வெளியாகி உள்ள ஆனந்த் தேவரகொண்டாவின் எபிக் படம் எப்படி இருக்கு? விம்ரசனம் இதோ

Anand Deverakondas Epic Movie OTT Review | தெலுங்கு சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நாயகன்களில் ஒருவராக உள்ளவர் நடிகர் ஆனந்த் தேவரகொண்டா. இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் எபிக். இந்தப் படம் தற்போது ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ஓடிடியில் வெளியாகி உள்ள ஆனந்த் தேவரகொண்டாவின் எபிக் படம் எப்படி இருக்கு? விம்ரசனம் இதோ
எபிக்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Oct 2026 18:42 PM IST

தெலுங்கு சினிமாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது 90ஸ் ஏ மிடில் கிளாஸ் பயோபிக். இந்த தொடரை இயக்குநர் ஆதித்யா ஹசன் எழுதி இயக்கி இருந்தார். 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருந்த இந்த இணையதள தொடர் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த கதையில் ஒரு ஆசிரியர் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். தனது குழந்தைகளின் படிப்பில் கண்டிப்புடன் அவர் இருப்பார். ஆனால் அவரது மூன்றாவது மகன் ஆதித்யா மட்டும் படிப்பில் நாட்டம் இல்லாமல் இருப்பான். அந்த மகனின் இளமை காலம் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து தற்போது தெலுங்கு சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் தான் எபிக்.

இந்தப் படத்தில் ஆனந்த் தேவரகொண்டா தான் நாயகனாக நடித்து உள்ளார். விஜய் தேவரகொண்டாவின் தம்பியாக தெலுங்கு சினிமாவில் ஆனந்த் தேவரகொண்டா கடந்த 2019-ம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து இதுவரை ஆனந்த் தேவரகொண்டாவின் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் 7 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதில் 7-வது படம் தான் எபிக் ஆகும்.

ஓடிடியில் வெளியாகி உள்ள எபிக் படம் எப்படி இருக்கு?

இந்த எபிக் படம் சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இயக்குநராக ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் இளைஞர் ஆதித்யாவை அவரது அப்பா தெரிந்த நபர் மூலம் கன்னடாவிற்கு படிக்க அனுப்புகிறார். அங்கு படித்து வேலைக்கு சேர்ந்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்பதற்காக அனுப்பிவைக்கப்படுகிறார். ஆனால் ஆதித்யாவோ கோர்ஸ் முடிந்ததும் மீண்டும் இந்தியாவிற்கு சென்று இயக்குநராக வேண்டும் என்று நினைத்துதான் கனடாவிற்கே செல்கிறார்.

Also Read… அனிருத் – காவ்யா மாறன் திருமணம்… முதலமைச்சர் விஜய்க்கு நேரில் அழைப்புவிடுத்த கலாநிதிமாறன் – வைரலாகும் போட்டோஸ்!

அப்படி கன்னடாவிற்கு சென்ற இடத்தில் தான் ஆதித்ய நாயகி கடலியை சந்திக்கிறார். நாயகி உடன் ஆதித்யாவிற்கு நல்ல ரேம்போ செட் ஆகிறது. காதல் வேண்டாம் திருமணம் வேண்டாம் ஆனால் நாம் ஒன்றாக இருக்கலாம். நமக்கு பிடித்த மாதிரி இருக்கலாம் என்று நாயகி சொல்ல அதற்கு ஆதித்யா சம்மதிக்கிறார். ஆனால் காலப் போக்கில் ஆதித்யாவிற்கு நாயகி மீது காதல் ஏற்படுகின்றது. இறுதியில் அவர்கள் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை.

Also Read… ராசாத்தி ஒன் நெனப்பு கருவக்காட்டு முள்ளாச்சுடி… ஒரு ஆண்டை நிறைவு செய்தது துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம்!

Follow Us