AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ராம் சரண் பட இயக்குநருடன் இணையும் சூர்யா? வைரலாகும் தகவல்

Actor Suriya Next Movie Update | தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் புஜ்ஜி பாபு சனா. இவர் நடிகர் சூர்யாவிற்காக ஒரு கதை எழுதி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ராம் சரண் பட இயக்குநருடன் இணையும் சூர்யா? வைரலாகும் தகவல்
சூரியா
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Oct 2026 07:30 AM IST

இந்திய சினிமாவைப் பொருத்தவரை வெவ்வேறு மொழிகளில் உள்ள இயக்குநர்கள் மற்ற மொழியில் உள்ள முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்க வேண்டும் என்று ஆசைப்படுவது வழக்கமாக உள்ளது. அதன்படி தமிழ் மொழியில் உள்ள பல உச்ச நடிகர்களை மற்ற மொழியில் உள்ள இயக்குநர்கள் தொடர்ந்து இயக்கி வருவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது உள்ள உச்ச நடிகர் சூர்யா தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள சினிமா இயக்குநர்களுடன் கூட்டணி வைத்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அந்த வகையில் சூர்யாவின் (Actor Suriya) நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள சீன் படத்தையும் மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 48 படத்தை இயக்குநர் டிஜே ஞானவேல் எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள படங்கள் தொடர்பான தகவல்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ராம் சரண் பட இயக்குநருடன் இணையும் சூர்யா?

தெலுங்கு இயக்குநர் புச்சி பாபு, சூர்யாவுக்காக ஒரு கதையை எழுதி வருவதாகவும், இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, பெத்தி படத்திற்குப் பிறகு மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து பணியாற்ற புச்சி பாபு சனா திட்டமிட்டிருந்தார், ஆனால் அந்தத் திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் வேறொரு கதையைப் பற்றிப் பேசி வருவதோடு, அதில் சூர்யாவை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தப் படம் குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஒருவேளை இது உறுதியானால், தெலுங்கு இயக்குநர் ஒருவருடன் சூர்யா பணியாற்றும் இரண்டாவது படமாக இது அமையும் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

Also Read… Jiiva: காதல் கசக்குது… ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் 2வது பாடல் வெளியானது!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நான் ஸ்கூல் படிக்கும்போது… அந்த நடிகரோட படத்தின் FDFS காட்சியை மிஸ் செய்ய மாட்டேன் – நடிகர் அசோக் செல்வன்!

Follow Us