அதி தீவிர புயலாக மாறும் அர்னாப் புயல்.. தமிழகத்தில் இன்று கனமழைக்கு எச்சரிக்கை!
Tamil Nadu Rains: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று (அக்டோபர் 26) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அக்டோபர் 26, 2026: வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, இன்று (அக்டோபர் 26) காலை ‘அர்னாப்’ புயலாக உருவெடுத்துள்ளது. இந்தப் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நள்ளிரவுக்குள் தீவிர புயலாகவும், நாளை (அக்டோபர் 27) மிகத் தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் கடலோரப் பகுதிகளுக்கு இடையே, பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையிலான கடற்கரைப் பகுதியில், ஏனாம் அருகே மிகத் தீவிர புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழைக்கு எச்சரிக்கை!
இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கடலோர தமிழகப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. மேலும், லட்சத்தீவு பகுதிகளில் இருந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கடலோர தமிழகப் பகுதிகள் வரை, தெற்கு கேரளா வழியாகக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
மேலும் படிக்க: கே.என்.நேருவுக்கு பின்னடைவு.. ரூ. 634 கோடி லஞ்சப் புகாரில் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!!
இதன் காரணமாக, இன்று (அக்டோபர் 26) நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மேலும், கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த சில நாட்களுக்கான மழை முன்னறிவிப்பு!
அக்டோபர் 27: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது.
அக்டோபர் 28: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். பிற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
மேலும் படிக்க: திமுக பிரமுகர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை.. சேலத்தில் பயங்கரம்!!
அக்டோபர் 29, 30: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அக்டோபர் 31: தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 1: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானிலை எப்படி?
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று (அக்டோபர் 26) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.