AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திரையரங்குகளில் 50 நாட்களை கடந்த ரெட்ரோ படம்… கார்த்திக் சுப்பராஜின் நெகிழ்ச்சிப் பதிவு

50 Days Of Retro Movie: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி 50 நாட்களை கடந்தது குறித்து கார்த்திக் சுப்பராஜ் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திரையரங்குகளில் 50 நாட்களை கடந்த ரெட்ரோ படம்… கார்த்திக் சுப்பராஜின் நெகிழ்ச்சிப் பதிவு
ரெட்ரோ படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Jun 2025 16:11 PM IST

நடிகர் சூர்யாவின் (Actor Suriya) நடிப்பில் 44-வது படமாக திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Director Karthik Subbaraj) இயக்கி இருந்தார். படம் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி 50 நாட்களை கடந்தது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளதாவது, “தனிப்பட்ட முறையில் எனக்கு இது ஒரு உணர்ச்சிகரமான ரோலர் கோஸ்டர் சவாரி என்ரே சொல்லலாம். படம் திரையரங்குகளில் வெளியான பிறகு ஒரு போரை நடத்தியது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட சிலர் படத்தின் மீதான தங்களது வெறுப்பை பரப்பியபோதும் ரசிகர்களிடையே படத்திற்கு அன்பு இருந்தது. எங்கள் மீது கொண்ட ரசிகர்களின் அன்பு இந்த போரை வெல்ல வைத்தது!! #TheOneWon

ரெட்ரோ படத்தின் மீதான உண்மையான ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கும் மதிப்புரைகள் மற்றும் கருத்துக்களுக்கு நன்றி.  நிச்சயமாக அனைத்தையும் எடுத்துக்கொண்டு, எனது எதிர்கால படைப்புகளில் பிரதிபலிக்கும் என்றும் தெரிவித்து இருந்தார். மேலும் ரெட்ரோ படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் எப்போதும் இது ஒரு சிறப்புமிக்க படமாக இருக்கும்” என்றும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

ரெட்ரோ படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட பதிவு:

சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ரெட்ரோ படம்:

நடிகர் சூர்யா நாயகனாக நடித்த இந்த ரெட்ரோ படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து இருந்தார். சூர்யாவின் கதாப்பாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு போலவே நடிகை பூஜா ஹெக்டேவின் கதாப்பாத்திரத்திற்கும் இந்தப் படத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் சுவாசிகா, ஜோஜூ ஜார்ஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம், கருணாகரன், நாசர், சிங்கம் புலி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். படம் கடந்த 30-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி இருந்தாலும் திரையரங்குகளிலும் படம் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us