AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ICC Ranking: ஐசிசி ஒருநாள் தரவரிசை.. இறக்கத்தை கண்ட ரோஹித் சர்மா..!

ICC ODI Rankings: நியூசிலாந்து தொடரில் ரோஹித் சர்மாவின் ஏமாற்றமளிக்கும் ஆட்டம், ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் அவரை 5வது இடத்திற்குத் தள்ளியுள்ளது. சுப்மன் கில் முதலிடத்தில் நீடிக்க, விராட் கோலி 3வது இடத்தில் நிலைத்துள்ளார். கே.எல். ராகுல் டாப் 10ல் இருந்து வெளியேறினார். இங்கிலாந்தின் டாம் பாண்டன் 34 இடங்கள் முன்னேறி 13வது இடத்தைப் பிடித்து குறிப்பிடத்தக்க எழுச்சியைப் பதிவு செய்துள்ளார்.

ICC Ranking: ஐசிசி ஒருநாள் தரவரிசை.. இறக்கத்தை கண்ட ரோஹித் சர்மா..!
ரோஹித் சர்மாImage Source: AP
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Nov 2026 16:15 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் (IND vs NZ) கொண்ட ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவின் செயல்பாடு ஏமாற்றமளித்தது. தொடர் முழுவதும் 4 இன்னிங்ஸ்களில் ரோஹித் சர்மா (Rohit Sharma) வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். இது அவரது ஒருநாள் பேட்டிங் தரவரிசையையும் பாதித்துள்ளது. ஐசிசி தனது சமீபத்திய தரவரிசையை இன்று அதாவது 2026 நவம்பர் 18ம் தேதி வெளியிட்டது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் முதல் இடத்தில் நீடிக்கிறார். அதேநேரத்தில், விராட் கோலியின் நிலை மாறாமல் உள்ளது. இங்கிலாந்து பேட்ஸ்மேன் டாம் பாண்டன் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளார்.

ALSO READ: நியூசிலாந்து தொடரில் சொதப்பல்.. 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் இடம் கேள்வி!

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில், முதல் 5 இடங்களில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே உள்ளது. ரோஹித் சர்மா 732 ரேட்டிங்குடன் 4வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் ஜத்ரான் 5வது இடத்திலிருந்து 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதன்படி, சுப்மன் கில் 806 ரேட்டிங்குடன் முதலிடத்தில் நீடிக்கிறார். டெஸ்ட் போட்டிகளுக்குத் தயாராவதற்காக, கில் நியூசிலாந்துக்கு எதிரான 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகினார். டேரில் மிட்செல் 778 ரேட்டிங்குடன் 2வது இடத்திலும், விராட் கோலி (757) 3வது இடத்திலும் உள்ளனர்.

டாப் 10ல் இருந்து வெளியேறிய கே.எல்.ராகுல்..

ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையின் முதல் 10 இடங்களிலிருந்து கே.எல். ராகுல் வெளியேறியுள்ளார். அதாவது, 10-வது இடத்திலிருந்து 11-வது இடத்திற்குச் சரிந்துள்ளார். ஜோ ரூட் 2 இடங்கள் முன்னேறி 9வது இடத்தைப் பிடித்துள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம் 9வது இடத்திலிருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதில், இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட் ஒரு இடம் சரிந்தும்,ஷாய் ஹோப் ஒரு இடம் முன்னேற்றமும் கண்டுள்ளனர். இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் 2 இடங்கள் முன்னேறி பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஐசிசி ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை (முதல் 10)

  • சுப்மன் கில் (இந்தியா) – 806
  • டேரில் மிட்செல் (நியூசிலாந்து) – 778
  • விராட் கோலி (இந்தியா) – 757
  • இப்ராஹிம் சத்ரான் (ஆப்கானிஸ்தான்) – 752
  • ரோஹித் சர்மா (இந்தியா) – 732
  • ஷாய் ஹோப் (வெஸ்ட் இண்டீஸ்) – 710
  • பென் டக்கெட் (இங்கிலாந்து) – 699
  • பாபர் அசாம் (பாகிஸ்தான்) – 661
  • ஜோ ரூட் (இங்கிலாந்து) – 652
  • குசல் மெண்டிஸ் (இலங்கை) – 649

ALSO READ: இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் தொடர் 2026.. அதிகாலை 3 மணிக்கு நடைபெறுகிறதா?

டாம் பாண்டன் அதிரடி முன்னேற்றம்:

இங்கிலாந்து பேட்ஸ்மேன் டாம் பாண்டன் கடந்த 2026 நவம்பர் 15ம் தேதி அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 121 ரன்கள் என்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்காக பாண்டன் ஐசிசி தரவரிசையில் 34 இடங்கள் முன்னேறி 13வது இடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் வில் யங்கும் 15 இடங்கள் முன்னேறி 30வது இடத்தைப் பிடித்து, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் 5 இடங்கள் பின்தங்கி 23வது இடத்திற்கு வந்துள்ளார்.

 

Follow Us