ICC Ranking: ஐசிசி ஒருநாள் தரவரிசை! கில் முதலிடம், KL ராகுல் டாப் 10க்குள் முன்னேற்றம்!
ICC ODI Rankings: ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் தொடர்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அசத்திய கே.எல். ராகுல் 7 இடங்கள் முன்னேறி முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். சுப்மன் கில் தனது நம்பர் 1 இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். விராட் கோலி ஒரு இடம் சரிந்தாலும், ரோஹித் சர்மா தனது 4வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். முதல் 10 இடங்களில் 4 இந்திய வீரர்கள் உள்ளனர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. சமீபத்திய ஐசிசி வெளியிட்ட தரவரிசையில், இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் முதல் 10 இடங்களுக்குள் முன்னேற்றத்தை அடைந்துள்ளார். இந்திய அணியின் (Indian Cricket Team) கேப்டன் சுப்மன் கில்லும் தனது முதல் இடத்தை தொடர்ந்து தக்கவைத்து கொண்டார். இதன் விளைவாக, ஐசிசி ஒருநாள் தரவரிசை பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய வீரர்களின் ஆதிக்கம் தெளிவாகத் தெரிகிறது. ஐசிசி இன்று அதாவது 2026 அக்டோபர் 7ம் தேதி வெளியிட்ட தரவரிசை பட்டியலில் கே.எல். ராகுலுக்கு (KL Rahul) முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் ராகுல் 7 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தைப் பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கே.எல் ராகுல் ஆட்டமிழக்காமல் 129 ரன்கள் எடுத்தார். இதுதான் தரவரிசையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொடுத்தது.
ALSO READ: ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடி சதம் – மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தி இந்திய அபார வெற்றி
நம்பர் 1 இடத்தில் சுப்மன் கில்:
ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்தில் நீடிக்கிறார். சமீபத்திய தரவரிசையில் கில் 841 மதிப்பீட்டுப் புள்ளிகளைப் பெற்றுள்ளார். கில்லைத் தொடர்ந்து, நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 2ம் இடத்திலும், இரண்டாம் இடத்தில் இருந்த விராட் கோலி 3ம் இடத்திலும் உள்ளனர். அதேநேரத்தில், ரோஹித் சர்மாவும் தனது நான்காம் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.




முதல் 10 இடங்களில் 4 இந்திய பேட்ஸ்மேன்கள்
சமீபத்திய தரவரிசையின்படி, முதல் 10 இடங்களில் 4 இந்திய பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். சுப்மன் கில் முதலிடத்திலும், விராட் கோலி 3ம் இடத்திலும், ரோஹித் சர்மா 4ம் இடத்திலும், தற்போது கே.எல். ராகுல் 10வது இடத்திலும் உள்ளனர்.
3வது இடத்திற்கு சரிந்த விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் விராட் கோலி, சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடினார். முதல் போட்டியில் கோலி 139* ரன்கள் எடுத்தார். பின்னர், இரண்டாவது போட்டியில் 29 ரன்களுக்கும், மூன்றாவது போட்டியில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். இவ்வாறு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது கோலியின் தரவரிசையைப் பாதித்துள்ளது. இன்று அதாவது 2026 அக்டோபர் 7ம் தேதி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்ட சமீபத்திய தரவரிசைப் பட்டியலில், கோலி ஒரு இடம் சரிந்துள்ளார்.
ALSO READ: 4 ஆண்டுகளுக்குப் பிறகு! இந்திய அணிக்குள் புவனேஷ்வர்.. எதிர்பார்ப்பில் NZ தொடர்!
ஒருநாள் போட்டிகளின் பேட்டிங் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்த கிங் கோலி, தற்போது 781 மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்குச் சரிந்துள்ளார். நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 794 மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.