AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஐபிஎல் 2026 சீசனுடன் தோனி ஓய்வு நிச்சயம்..? முன்னாள் சிஎஸ்கே வீரர் உறுதி..!

M.S.Dhoni Retirement: 2026 ஐபிஎல் சீசன் முழுவதும் எம்எஸ் தோனி விளையாடுவாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்தது. இதுதொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், இந்த சீசனின் அனைத்து போட்டிகளிலும் தோனி விளையாடுவார் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

IPL 2026: ஐபிஎல் 2026 சீசனுடன் தோனி ஓய்வு நிச்சயம்..? முன்னாள் சிஎஸ்கே வீரர் உறுதி..!
எம்.எஸ்.தோனிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Mar 2026 18:09 PM IST

ஐபிஎல் 2026 (IPL 2026) 2026 மார்ச் 28ம் தேதி தொடங்கி, வருகின்ற 2026 மே 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஐபிஎல் 2026 சீசனின் முதல் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. ஆனால் எப்போதும் போல, சீசன் தொடங்குவதற்கு முன்பே மீண்டும் ஒருமுறை எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்த பேச்சு எழ தொடங்கியுள்ளது. எம்.எஸ். தோனி கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிஎஸ்கேவின் (CSK) பயிற்சி முகாமில் இணைந்து, தீவிர பயிற்சியில் மேற்கொண்டு வருகிறார். இதன்மூலம், இந்தியன் பிரீமியர் லீக்கின் தனது தொடர்ச்சியான 19வது சீசனை விளையாட எம்.எஸ்.தோனி விளையாட தொடங்கிவிட்டார் என்று அர்த்தம்.

ALSO READ: பாகிஸ்தான் வீரர் ஒப்பந்தம்.. எழுதப்படாத விதியை மாற்றிய காவ்யா மாறன்.. கிளம்பும் எதிர்ப்புகள்..!

ஐபிஎல் 2026 பிறகு எம்.எஸ்.தோனி ஓய்வா..?

2026 ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாக, முன்னாள் இந்திய மற்றும் சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் எம்எஸ் தோனியின் வாழ்க்கை குறித்து ஒரு கருத்து கணிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதில், எம்.எஸ்.தோனி இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கற்பனை செய்வது கடினம் என்றும், ஆனால் 2026 கடைசி சீசனில் “தலயின்” ஆண்டாக இருக்கும் என்றும் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ஜியோஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் நடந்த கலந்துரையாடலின் போது பேசிய ​​இர்ஃபான் பதான், ”எம்.எஸ். தோனி இல்லாமல் சி.எஸ்.கே முழுமையடையாது. மஞ்சள் ஜெர்சியில் அவரைப் பார்க்கும் கடைசி சீசனாக இது இருக்கலாம். எம்.எஸ். தோனி இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐபிஎல்லை கற்பனை செய்வது கடினம்” என்று கூறினார்.

ஐபிஎல் 2025 சீசன் வரை எம்.எஸ்.தோனிக்கு பிறகு ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சென்னை அணிக்காக கிடைக்கவில்லை. தமிழ்நாட்டின் ஜெகதீசன் முதல் பல வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் முயற்சித்தது. ஆனால், இது பெரியளவில் பலனளிக்கவில்லை. இந்தநிலையில், சிஎஸ்கே டிரஸ்ஸிங் ரூம் எதிர்காலத்திற்கான அணியை உருவாக்குவதில் ஐபிஎல் 2026 ஏலத்தில் சிறப்பான அணியை உருவாக்கியது. மேலும் இந்த முறை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனையும் வர்த்தகம் மூலம் சிஎஸ்கே அணி எடுத்தது. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருப்பதால், தற்போது 2-3 வீரர்களை எதிர்காலத்திற்காக தயார்படுத்துவதே முன்னுரிமை அளிக்க, ஐபிஎல் 2026 சீசனில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ: அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்த ஜெயிலர் சாங்.. சட்ட சிக்கலில் சிஎஸ்கே.. நீதிமன்றத்தில் சன் நெர்வொர்க் வாதம்!

எம்.எஸ். தோனி இந்த சீசன் முழுவதும் விளையாட மாட்டாரா?

2026 ஐபிஎல் சீசன் முழுவதும் எம்எஸ் தோனி விளையாடுவாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்தது. இதுதொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், இந்த சீசனின் அனைத்து போட்டிகளிலும் தோனி விளையாடுவார் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

Follow Us