AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kavya Maran: பாகிஸ்தான் வீரர் ஒப்பந்தம்.. எழுதப்படாத விதியை மாற்றிய காவ்யா மாறன்.. கிளம்பும் எதிர்ப்புகள்..!

The Hundred: ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும், தென்னாப்பிரிக்காவின் SA20 லீக்கில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் இந்தக் குழுமம் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு, தி ஹண்ட்ரட் போட்டியில் வடக்கு சூப்பர்சார்ஜர்ஸ் அணியின் உரிமையை சன் குழுமம் வாங்கியது. அதன் பிறகு அந்த அணி சன்ரைசர்ஸ் லீட்ஸ் என மறுபெயரிடப்பட்டது.

Kavya Maran: பாகிஸ்தான் வீரர் ஒப்பந்தம்.. எழுதப்படாத விதியை மாற்றிய காவ்யா மாறன்.. கிளம்பும் எதிர்ப்புகள்..!
காவ்யா மாறன் - அப்ரார் அகமதுImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Mar 2026 14:54 PM IST

இங்கிலாந்தின் பிரபலமான டி20 லீக்கான தி ஹண்ட்ரட்-க்கான (The Hundred) சமீபத்திய வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, காவ்யா மாறனின் சன் குழுமத்திற்கு சொந்தமான சன்ரைசர்ஸ் லீட்ஸ் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை (Abrar Ahmed) சுமார் ரூ. 2.33 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த முடிவு சமூக ஊடகங்களில் கணிசமான விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு பிறகு, இந்தியாவுக்கு சொந்தமான ஒரு அணி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை எடுப்பது இதுவே முதல் முறையாகும்.

ALSO READ: சிக்கலில் ஐபிஎல் 2026ன் முதல் போட்டி.. RCB – SRH போட்டி மாற்றமா?

பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது:

சன் குழும உரிமையாளர் காவ்யா மாறன் நேற்று அதாவது 2026 மார்ச் 12ம் தேதி தி ஹண்ட்ரட்-க்கான ஏலத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி அப்ரார் அகமதுவை ஏலத்தில் எடுத்தது. கிடைத்த அறிக்கையின்படி, சன்ரைசர்ஸ் லீட்ஸ் அப்ரார் அகமதுவை 190,000 பவுண்டுகளுக்கு அல்லது இந்திய நேரப்படி தோராயமாக ரூ. 2.34 கோடிக்கு வாங்கியது. ஏலத்தின்போது அப்ரார் அகமதுவை வாங்குவதற்காக சன்ரைசர்ஸ் லீட்ஸ் மற்றும் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியாக, சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி அதிகபட்ச ஏலத்தில் அப்ரார் அகமதுவை தங்கள் அணியில் சேர்த்தது.

எழுதப்படாத விதி:

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு சொந்தமான அணியில் சேரும் முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அப்ரார் அகமது பெறுகிறார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால அரசியல் பதட்டங்கள் காரணமாக, ஐபிஎல் அணிகள் 2009 முதல் பாகிஸ்தான் வீரர்களை ஒப்பந்தம் செய்யவில்லை. இந்த காரணத்திற்காக, அன்று முதல் இன்று வரை இந்தியாவிற்கு சொந்தமான அணிகளில் பாகிஸ்தான் வீரர்களை சேர்க்கக்கூடாது என்ற எழுதப்படாத விதியாக உள்ளது.

சன் குழும அணி அப்ரார் அகமதுவை வாங்கிய பிறகு, சமூக ஊடகங்களில் பல ரசிகர்கள் இந்த முடிவை கேள்வி எழுப்பினர். சிலர் இது கிரிக்கெட்டுக்கு சரியானது என்றும், இதில் அரசியல் இருக்கக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

சன் குழுமத்திற்கு கீழ் பல கிரிக்கெட் அணிகள்:

ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும், தென்னாப்பிரிக்காவின் SA20 லீக்கில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் இந்தக் குழுமம் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு, தி ஹண்ட்ரட் போட்டியில் வடக்கு சூப்பர்சார்ஜர்ஸ் அணியின் உரிமையை சன் குழுமம் வாங்கியது. அதன் பிறகு அந்த அணி சன்ரைசர்ஸ் லீட்ஸ் என மறுபெயரிடப்பட்டது.

ALSO READ: ஐபிஎல்லின் மாலை நேர போட்டிகள் எப்போது தொடங்கும்..? நேரத்தில் மாற்றமா?

தி ஹண்ட்ரட் தொடரின் புதிய சீசன் 2026 ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி 2026 ஆகஸ்ட் 16 வரை நடைபெறும். அப்ரார் அகமது லீக்கில் எவ்வாறு செயல்படுகிறார் என்பதையும், இந்த முடிவு எதிர்காலத்தில் மற்ற அணிகளின் நிலைப்பாட்டை மாற்றுமா என்பதையும் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

Follow Us