OTT Movies: பராசக்தி முதல் தி ராஜா சாப் வரை… இந்த வீக்கில் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
This Week Latest OTT Releases : தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரையரங்குகளில் பல படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் இந்த வாரத்தில் ஓடிடியில் பல படங்கள் வெளியாகியும், வெளியாக காத்திருக்கிறது. அந்த திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
பராசக்தி திரைப்படம் : நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பராசக்தி (Parasakthi). இந்த படமானது கடந்த 2026 ஜனவரி 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்த நிலையில், கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. சிவகார்த்திகேயனின் இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் (G.V.Prakash Kumar) இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிகர்கள் ரவி மோகன் (Ravi Mohan), அதர்வா, ராணா, பேசில் ஜோசப் மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்த நடித்திருந்தனர். இந்த படம் இந்திமொழி திணிப்பிற்கு எதிரான கதைக்களத்தில் வெளியான நிலையில், திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இதன் ஓடிடி ரிலீஸ் உரிமையை ஜீ5 (Zee5) நிறுவனம் வாங்கியிருந்த நிலையில், இன்று 2026 பிப்ரவரி 7ம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: ‘நாளை நாளை பாடல் ட்ரோல் குறித்த கேள்வி?’.. வேடிக்கையை பதிலளித்த மமிதா பைஜூ!




பராசக்தி படம் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான பதிவு :
பராசக்(தீ) பரவட்டும் 🔥 தமிழ் வாழ்க 💥#Parasakthi is Now Streaming On ZEE5🔥 @siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @DawnPicturesOff @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14 @saregamasouth @dop007 @MrKarthikRajkmr @editorsuriya… pic.twitter.com/b4e7Z7yzd9
— ZEE5 Tamil (@ZEE5Tamil) February 6, 2026
தி ராஜா சாப் திரைப்படம் (The Raja Saab):
ரெபெல் ஸ்டார் பிரபாஸ் (Prabhas) நடிப்பில், இயக்குநர் மாருதி இயக்கத்தில் வெளியான தெலுங்கு படம்தான் தி ராஜா சாப். இப்படத்தில் நடிகர் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகைகள் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரீதி குமார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் பான் இந்திய படமாக வெளியானது. ஹாரர் காமெடி கதைக்களத்தில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுவந்தது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 4 வாரத்தை கடந்த நிலையில், கடந்த 2026 பிப்ரவரி 6ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுவருகிறது.
கொம்பு சீவி திரைப்படம் (kombu Seevi) :
நடிகர்கள் சரத்குமார் (Saathkumar) மற்றும் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனின் கூட்டணியில் வெளியான படம் கொம்புசீவி. இந்த படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய, இயக்குநர் பொன்ராம் இயக்கியிருந்தார். இப்படத்தில் காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2025 டிசம்பர் 25ம் தேதியில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்றுவந்த இப்படம் தற்போது டென்ட்கொட்டா என்ற ஓடிடியில் வெளியகியுள்ளது.
இதையும் படிங்க: ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் பட ஓடிடி- சாட்டிலைட் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்?
ஐபிஎல் திரைப்படம் (Indian Penal Law) :
இன்ஸ்டாகிராம் பிரபலமான டிடிஎப் வாசன் (TTF Vasan) கதாநாயகனாக நடித்த படம்தான் ஐபிஎல். இப்படத்தின் மூலமாக தமிழில் இவர் கதாநாயகனாக நுழைந்த நிலையில், இப்படம் கடந்த 2025 நவம்பர் 28ம் தேதியில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இப்படத்தை இயக்குநர் கருணாநிதி இயக்கியிருந்த நிலையில், நடிகர்கள் கிஷோர் குமார் மற்றும் அபிராமி கோபிக்குமார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது தற்போது டென்ட்கொட்டா என்ற ஓடிடியில் இன்று 2026 பிப்ரவரி 7ம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுவருகிறது.