Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Lokesh Kanagaraj : ‘LCU’ உருவான விதம்.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!

Lokesh Kanagaraj About Lokesh Cinematic Universe Begun : கோலிவுட் சினிமாவில் உச்ச இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். தமிழில் குறைந்த படத்தை இயக்கியிருந்தாலும் முன்னணி நடிகர்களுடன் படங்களை இணைந்திருக்கிறார். இந்நிலையில், இவரின் லோகேஷ் சினிமெட்டிக் யுனிவர்ஸ் படத் தொகுப்பின் தொடக்கம் எவ்வாறு அமைந்தது என்பதைப் பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். அது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

Lokesh Kanagaraj : ‘LCU’ உருவான விதம்.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!
லோகேஷ் கனகராஜ்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 24 Jul 2025 17:08 PM

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanakagaraj) இயக்கத்தில் தமிழில் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் லியோ (Loe). தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) 67வது திரைப்படமாக இப்படம் வெளியானது. இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் இணைந்து நடித்திருந்தார். உலகளாவிய வசூலில் சுமார் ரூ. 600 கோடிகளுக்கு மேல் இப்படமானது வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த லியோ படத்தை அடுத்ததாக, நடிகர் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் கூலி (Coolie) படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வந்தார். இப்படமும் முழுவதுமாக தயாராகி ரிலீசிற்கு காத்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ், லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (Lokesh Cinematic Universe) படத் தொகுப்பு அமைவதற்கான காரணம் பற்றியும், அது அமைந்த விதம் பற்றியும் ஓபனாக பேசியுள்ளார்.

அந்த நேர்காணலில் பேசிய லோகேஷ் கனகராஜ், கைதி திரைப்படத்திற்குப் பின் அதன் தொடர்ச்சியாக விக்ரம் படம் உருவாக்கவேண்டும் என ஆரம்பத்தில் நினைக்கவில்லை என்றும், நடிகர் நரேன் கதாபாத்திரம் விக்ரம் படத்தில் இணைந்து, LCU உருவானது பற்றியும் பேசியுள்ளார்.

இதையும் படிங்க : லியோ படத்தில் அதை பன்னலாமா வேண்டாமா என்ற குழப்பம் எனக்கு இருந்தது – லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் உருவானது குறித்து லோகேஷ் கனகராஜ் பேச்சு :

சமீபத்தில் கூலி திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளுக்காக, லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நேர்காணலில் லோகேஷ் கனகராஜ், ” நானும், கமல் சாருடன் புதிய படம் ஒன்றில் இணைவதாக முடிவானது, கைதி திரைப்படம் வெளியாகி மாஸ்டரும் ரிலீசிற்கு தயாராகியிருந்தது. அப்போதுதான் கமல் சாரிடம் விக்ரம் படத்திற்கான கதையைக் கூறியிருந்தேன், அவருக்குப் பிடித்து கதையை மேம்படுத்துவதற்காக 6 மாதம் டைம் எடுத்துக்கொண்டேன். அப்போது கொரோனா நேரம் என நினைக்கிறேன்.

அந்த சமயத்தில்தான் எனக்கு திடீரென ஒரு யோசனை வந்தது, கைதியில் நரேன் கதாபாத்திரம் போல, விக்ராமிலும் யாராவது ஒரு கதாபாத்திரம் வேண்டும் என நினைத்தேன். அப்போது நரேன் சார் மாதிரி யாரை விக்ரம் படத்தில் நடிக்கவைப்பது என யோசித்துக்கொண்டே இருந்தேன், அவர் வேறு கைதி படத்தில் நடித்துவிட்டார் என நினைத்துக்கொண்டிருந்தேன்.

இதையும் படிங்க : ஸ்கூல் கட்டடித்துவிட்டு நான் தியேட்டரில் பார்த்த முதல் தமிழ் படம் – ஃபகத் பாசில் ஓபன் டாக்

அப்போதுதான் எனக்கு புதிய சிந்தனை வந்தது, ஏன் நரேன் சாரை கைதி படத்துடன் தொடர்புப்படுத்தி நடிக்கவைக்கக் கூடாது என நினைத்தேன். எனது உதவி இயக்குநர்களிடமும் கூறினேன். ஆனால் அவர்களுக்குப் புரியவில்லை, அதன் பிறகுதான் நான் யுனிவர்ஸ் படம் பண்ணலாம்னு முடிவு பண்ணேன். விக்ரம் படத்தின் கதையை எழுதி முடித்ததும், கமல்ஹாசன் சார் கிட்டக் கொடுத்து, LCU பத்தி விளக்கினேன், அதன் பிறகுதான் அவர் அனுமதி கொடுத்தார்” என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஓபனாக கூறியிருந்தார்.

கூலி படத்தின் மோனிகா பாடல் ஹிட் பதிவு :

ரஜினிகாந்த்தின் 171வது திரைப்படமாக உருவாகியிருப்பது கூலி. தெலுங்கு , தமிழ் மற்றும் இந்தி என பான் இந்திய நடிகர்கள் பலரும் இணைந்து நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படமானது வரு 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகவிருக்கும் நிலையில், ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.