திரையரங்குகளில் 75 நாட்களைக் கடந்த சிறை படம் – கொண்டாட்டத்தில் படக்குழு
75 Days Of Vikram Prabhus Sirai Movie: தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் சிறை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 75 நாட்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி கணேசனின் பேரனாகவும், நடிகர் பிரபுவின் மகனாகவும் அறிமுகம் ஆனவர்தான் நடிகர் விக்ரம் பிரபு. இவர் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன போது பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவர் தேர்வு செய்யும் கதைகளும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது. இந்த நிலையில் நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் சிறை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்தப் படத்தை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கி இருந்தார். மேலும் இயக்குநர் தமிழ் உடன் இணைந்து சுரேஷ் ராஜகுமாரி படத்திற்கு திரைக்கதை எழுதி இருந்தனர். உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பிரபு உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இந்தப் படத்திற்கு இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




திரையரங்குகளில் 75 நாட்களைக் கடந்த சிறை படம்:
பிரபல தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரித்து இருந்தார். மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 75 நாட்களைக் கடந்துள்ளது. இதனைப் கொண்டாடும் விதமாக படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சிறை படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
75 Days of cinematic triumph 🏆
Starring @iamVikramPrabhu @lk_akshaykumar @iamanishma @t_ananda98#SureshRajakumari @madheshmanickam @justin_tunes @philoedit @directortamil77 @SRIMAN161725 @varshu03@PC_stunts @Synccinema @_gbalaji @sivadigitalart @arunisred #Arosam… pic.twitter.com/S1uRNcyaqE
— Seven Screen Studio (@7screenstudio) March 9, 2026