பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இயக்குநர் சிதம்பரத்திற்கு முன் ஜாமின் வழங்கியது நீதிமன்றம்!
Ernakulam Sessions Court Grants Anticipatory Bail to Director Chidambaram: இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பதியப்பட்டது. இந்த வழக்கில் இயக்குநர் சிதம்பரத்திற்கு எர்ணாகுளம் நீதிமன்றம் தற்போது முன் ஜாமின் வழங்கியுள்ளது.
சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைப்பெற்றுக்கொண்டேதான் இருக்கின்றது. மேலும் சினிமா துறை மட்டும் இன்றி பெண்கள் பணிபுரியும் அனைத்து துறைகளிலும் இந்த மாதிரியான பாலியல் சீண்டல்களை அவர்கள் இன்றும் சந்தித்துக்கொண்டே இருக்கின்றனர். இப்படி இருந்த சூழலின் சமீப காலமாக பெண்கள் தங்களுக்கு நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமைகளை தொடர்ந்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். மேலும் பலர் இன்னும் அதிகமாக முன்வந்து வழக்குகளையும் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் சிதம்பரத்தின் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பதியப்பட்டது. இந்த வழக்கில் தற்போது இயக்குநர் சிதம்பரத்திற்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஒருவர் இயக்குனர் சிதம்பரம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2022 ஆம் ஆண்டு தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பான புகாரை எடுத்துக்கொண்ட காவல் துறையினர் இயக்குநர் சிதம்பரத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை இன்று எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்றுள்ளது.
தன் மீதான பாலியல் வன்கொடுமை புகாரை மறுத்த இயக்குநர் சிதம்பரம்:
எர்ணாகுளம் டவுன் தெற்கு காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக, இயக்குநர் சிதம்பரத்திற்கு எர்ணாகுளத்தில் உள்ள அமர்வு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவை கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி 2026ம் ஆண்டு சனிக்கிழமை அமர்வு நீதிபதி கே.கே. பாலகிருஷ்ணன் பிறப்பித்தார். மேலும் முன் ஜாமின் கோரி இயக்குநர் சிதம்பரம் அளித்த மனுவில் தன் மீது அளிக்கப்பட்ட புகார் முற்றிலும் பொய்யானது என்று தெரிவித்துள்ளார்.




Also Read… இந்திய சினிமாவின் எவர்கிரீன் ஐகான் விருதை வென்ற சிம்ரன் – வைரலாகும் நெகிழ்ச்சிப் பதிவு!
மேலும் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு படத்தின் பணிக்காகவே அந்த நடிகையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் அது முற்றிலும் தொழில்முறை சார்ந்ததாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு புகாரை அளிப்பது தனது பெயருக்கு கலங்கம் விளைவிப்பதற்காகவே என்றும் இயக்குநர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Also Read… தனது பிஸ்னஸில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய யாரடி நீ மோகினி சீரியல் நடிகை – குவியும் வாழ்த்து!