Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2026-ம் ஆண்டில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் வரிசைக்கட்டும் படங்களின் லிஸ்ட் இதோ

Ravi Mohan Movies List : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு அடுத்தடுத்து 4 படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அந்தப் படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

2026-ம் ஆண்டில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் வரிசைக்கட்டும் படங்களின் லிஸ்ட் இதோ
நடிகர் ரவி மோகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Jan 2026 18:28 PM IST

தமிழ் சினிமாவில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே நாயகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் ரவி மோகன். இவர் நாயகனாக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன், ரொமாண்டிக், காமெடி மற்றும் ஃபேமிலி செண்டிமெண்ட் என்று நடிகர் ரவி மோகன் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்று சிறப்பு மிக்க பொன்னியின் செல்வன் நாவல் படமாக்கப்பட்டது. அதில் நடிகர் ரவி மோகன் பொன்னியின் செல்வனாக நடித்து அந்த கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்தார் என்று ரசிகர்கள் அவரை கொண்டாடித் தீர்த்தனர்.

இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் காதலிக்க நேரமில்லை. கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. கடந்த ஆண்டு ரவி மோகன் நடிப்பிப் இந்த ஒரே ஒரு படம் மட்டுமே வெளியாகி இருந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டு படங்கள் வரிசைக்கட்டி காத்திருக்கின்றது.

2026-ம் ஆண்டில் ரவி மோகன் நடிப்பில் வரிசைக்கட்டும் படங்கள்:

அதன்படி நடிகர் ரவி மோகன் வில்லனாக நடித்துள்ள பராசக்தி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து உள்ளார். மேலும் இவரது நடிப்பில் அடுத்தடுத்து ஜீனி, கராதே பாபு மற்றும் ப்ரோ கோட் ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த ப்ரோ கோட் படத்தை நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த் நிறுவனத்தை கடந்த 2025-ம் ஆண்டு நடிகர் ரவி மோகன் தொடங்கினார்.

Also Read… New Year: ஃபர்ஸ்ட் பார்ட் சூப்பர் ஹிட்.. 2026 கோடைக்காலத்தில் ரிலீசிற்கு காத்திருக்கும் பார்ட் 2 படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ!

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சீரியல் ஆக்டர் டூ கோலிவுட் நாயகன்… இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரிகிறதா? இவர் 3 ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார்!