Happy Raj: கலக்கல் காமெடி ஜானரில்…வெளியானது ஜி.வி. பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ பட புரோமோ வீடியோ!
Happy Raj Movie Promo: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளராக இருந்துவருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவரின் நடிப்பில் புதிதாக உருவாகிவரும் படம்தான் ஹேப்பி ராஜ். இந்த படத்தின் அறிமுக வீடியோவை நடிகர் பிரதீப் ரங்கநாதன் வெளியிட்டுள்ளார். தற்போது இது இணையத்தில் வைரலாகிவருகிறது.
தென்னிந்திய அளவில் இசையமைப்பாளராக பல்வேறு சாதனையைகளை செய்துவருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar). இவர் சமீபத்தில் தனுஷின் வாத்தி படத்திற்காக தேசிய விருதை வாங்கியுள்ளார். இது இவரின் 2வது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் இசையமைப்பாளராக மட்டுமில்லாமல், நடிகராகவும் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இதுவரை 25க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இவர் இணைந்துள்ள புதிய படம்தான் ஹேப்பி ராஜ் (Happy Raj). இந்த படத்தை அறிமுக இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் (Maria Raja Elanchezian) இயக்கியவரும் நிலையில், ட்ரைடென்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துவருகிறது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக, லவ்வர் படத்தில் நடித்த நடிகை ஸ்ரீ கௌரி பிரியா (Sri Gouri Priya) நடித்துள்ளார்.
இந்த படத்தின் அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் முதல் புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவை நடிகரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டுவருகிறது.




இதையும் படிங்க: சாண்ட்ராவிடம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பும் விஜய் சேதுபதி… வைரலாகும் வீடியோ
பிரதீப் ரங்கநாதன் வெளியிட்ட ஹேப்பி ராஜ் பட புரோமோ வீடியோ பதிவு :
Happy Vibe Check Promo of Happy Raj.
Wishing only the best for #MariaElanchezian @gvprakash@jaivarda04 @SureshJaikanth @srigouripriya @justin_tunes @actorabbas pic.twitter.com/vB1KzNoSGL
— Pradeep Ranganathan (@pradeeponelife) December 20, 2025
தமிழ் சினிமாவில் மீண்டும் நுழைந்த அப்பாஸ் :
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்தவர் அப்பாஸ். இவர் தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் நெருங்கிய கதாநாயகனாக வலம்வந்தார். இவரின் நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியான நிலையில், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்கும் விதத்தில் ஹேப்பி ராஜ் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர், நடிகை ஸ்ரீ கௌரி பிரியாவின் தந்தை வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஹேப்பி ராஜ் படத்தின் புரோமோ வீடியோ வெளியான நிலையில், ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: மணி ரத்தினத்துடன் இணையும் விஜய் சேதுபதி- சாய் பல்லவி… படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?
இந்த படம் ஒரு அதிரடி காதல் கதையை மையமாக கொண்டு, நகைச்சுவை, எமோஷனல் மற்றும் சண்டை தொடர்பான கதைக்களத்தில் தயாராகிவருகிறது என தெரியவருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துவரும் நிலையில், இப்படம் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.