GV. Prakash: விரைவில் பெரிய அளவில்.. ஹேப்பி ராஜ் படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் அப்டேட்!
GV. Prakash X Post: தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராக வலம்வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் கதாநாயகனாகவும் படங்ககளில் நடித்துவரும் நிலையில், இவரின் நடிப்பில் உருவாகிவரும் புது படம்தான் ஹேப்பி ராஜ். தற்போது இப்படத்தினை குறித்த அப்டேட் பதிவை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் (G.V.Prakash Kumar) தமிழில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவர் சிறந்த இசையமைப்பாளராக இருந்தாலும், நடிகராகவும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் பிளாக்மெயில் (Blackmail). கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் இப்படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தை அடுத்தாக புது புது படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் அறிமுக இயக்குநர் மரிய இளஞ்செழியன் (Maria Elanchezhian) இயக்கத்தில் இவர் நடித்துவரும் படம்தான் ஹேப்பி ராஜ் (Happy Raj). இந்த படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகியிருந்தது. அந்த வகையில் இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக லவ்வர் படத்தில் நடித்திருந்த நடிகை ஸ்ரீ கௌரி பிரியா (Sri Gouri Priya) இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது மிக நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்தின் புகைப்படங்களை பகிர்ந்து, இப்படத்தின் ரிலீஸ் குறித்து நடிகர் ஜி.வி. பிரகாஷ் அப்டேட் தெரிவித்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் பதிவு ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.




இதையும் படங்க: தியேட்டரில் வெற்றிநடைபோடும் களம் காவல் படம்… எவ்வளவு வசூலித்தது தெரியுமா?
ஹேப்பி ராஜ் படம் குறித்து நடிகர் ஜிவி. பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
#HappyRaj soon 🔥🔥🔥🔥 . A new next gen director on his way to make it big soon #mariaelanchezhian pic.twitter.com/wjes4Kbm2Y
— G.V.Prakash Kumar (@gvprakash) December 15, 2025
இந்த பதிவில் அவர், விரைவில் ஹேப்பி ராஜ் படம் வெளியாகும் என்றும், விரைவில் பெரிய அளவில் சாதிக்கப் போகும் புதிய தலைமுறை இயக்குநர் மரிய இளஞ்செழியன் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஜி.வி. பிரகாஷ் கைவசம் உள்ள புது திரைப்படங்கள் :
இசையமைக்குப்பாளராக ஜி.வி.பிரகாஷ் குமார் தெலுங்கில் 3 படங்கள், தமிழில் 3 படங்களுக்கும் மேல் இசையமைத்துவருகிறார். அந்த வகையில் இந்த பணிகளை தொடர்ந்து நடிகராகவும் சிறப்பாக பணியாற்றிவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் மெண்டல் மனதில், இம்மார்ட்டல் போன்ற படங்கள் உருவாகிவருகிறது. இதில் புதிதாக உருவாகிவரும் படம் இந்த ஹேப்பி ராஜ்.
இதையும் படிங்க: ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது ஆரோமலே படம்… விமர்சனம் இதோ!
இந்த படமானது முற்றிலும் வித்தியாசமான காதல் கதைக்களத்தில் தயாராகிவருகிறது. மேலும் இப்படம் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை போல மாறுபட்ட நகைச்சுவை, காதல் மற்றும் காதல் தோல்வி என மொத்த கலவையாக உருவாகிவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.