Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சாண்ட்ராவிடம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பும் விஜய் சேதுபதி… வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 76-வது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று விஜய் சேதுபதி வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரையும் சந்தித்து பேசுகிறார். இதில் சாண்ட்ராவின் செயல்களை கேள்வி கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சாண்ட்ராவிடம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பும் விஜய் சேதுபதி… வைரலாகும் வீடியோ
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Dec 2025 18:04 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 11-வது வார முடிவில் உள்ளது. ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்தித்து வாரம் முழுவதும் நடந்த விசயங்களை பற்றி நேரடியாக பேசுவார். இந்த நிலையில் இந்த 11-வது வாரம் பிக்பாஸ் வீட்டில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 3 அணிகளாக பிரிந்து போட்டியிட்டனர். இந்த போட்டியில் வெற்றிப்பெறும் அணியினர் அடுத்த வாரத்திற்கான தல டாஸ்கில் பங்கேற்பதுடன் அந்த அணியில் உள்ள ஒரு நபரனி குடும்பத்தினர் அடுத்த வாரம் நடைபெறும் ஃப்ரீஸ் டாஸ்கில் 24 மணி நேரமும் இருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுவரை எந்த சீசனிலும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் 24 மணி நேரம் பிக்பாஸ் வீட்டில் இருந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் நடைப்பெற்ற டாஸ்கில் கம்ருதின், கனி திரு, பார்வதி மற்றும் ஆதிரை இருந்த அணி வெற்றிப் பெற்றதால் அவர்களில் யார் குடும்பத்தினர் 24 மணி நேரம் தங்க வேண்டும் என்று பிக்பாஸ் கேள்வி எழுப்ப அதற்கு ஒரு விளையாட்டை விளையாடி ஆதிரையின் குடும்பத்தினர் தங்கவைக்க முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து 12-வது வாரத்திற்கான வீட்டு தல டாஸ்க் நடைப்பெற்றது. அதில் கம்ருதின் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது அவர்தான் 12-வது வாரத்திற்கான வீட்டுதலை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாண்ட்ராவிடம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பும் விஜய் சேதுபதி:

ஒரு பக்கம் டாஸ்க் சிறப்பாக நடைப்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மற்றொரு பக்கம் சாண்ட்ரா வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரிடமும் சண்டையிட்டுக் கொண்டு மிகவும் டாக்ஸிக்காக செயல்பட்டு வந்தார். இதுகுறித்து இன்றைய எபிசோடில் விஜய் சேதுபதி சாண்ட்ராவிடம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்புகின்றார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… மலையாள நடிகர் மற்றும் இயக்குனர் ஸ்ரீனிவாசன் காலமானார்

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜன நாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையைப் பெற்ற ஜூ தமிழ்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்