AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விமலின் வடம் படத்திலிருந்து வெளியானது பாண்டிமுனி பாடலின் லிரிக்கள் வீடியோ

Pandimuni Song Lyrical Video | நடிகர் விமல் நடிப்பில் வெளியாகும் படங்கள் தற்போது தொடர்ந்து மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள வடம் படத்தில் இருந்து பாண்டிமுனி என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகி உள்ளது.

விமலின் வடம் படத்திலிருந்து வெளியானது பாண்டிமுனி பாடலின் லிரிக்கள் வீடியோ
வடம் Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Feb 2026 21:59 PM IST

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் பெயரிடப்படாத கதாப்பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்தவர் நடிகர் விமல். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து கிராமத்து கதைகளில் காமெடியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் நடித்துவ் அந்த நடிகர் விமலின் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து விமலின் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் தொடர்ந்து 6 படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இதில் மூன்று படங்களில் கேமியோ வேடத்தில் நடித்த நடிகர் விமல் மூன்று படங்களில் நாயகனாகவும் நடித்து இருந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் விமலின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் அடுத்தடுத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதன்படி தற்போது நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் படம் வடம். இந்தப் படத்ஹ்டை இயக்குநர் கேந்திரன் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படம் கிராமங்களில் பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டியை மையமாக வைத்து உருவாகி வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் விமல் உடன் இணைந்து நடிகர்கள் நட்டி, சனஷ்கா ஸ்ரீ, பாலசரவணன், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தை மாசாணி பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் R. ராஜசேகர் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

வடம் படத்திலிருந்து வெளியானது பாண்டிமுனி பாடல்:

இந்த நிலையில் நடிகர் விமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் வடம் படத்திலிருந்து பாண்டிமுனி என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ள நிலையில் பாடலை அந்தோனி தாசன் பாடியுள்ளார். மேலும் இந்தப் பாடலின் வரிகளை பாடலாசிரியர் ஞானகரவேல் எழுதியுள்ளார். இந்த நிலையில் பாடலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ள நிலையில் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… தமிழ்ல விறுவிறுபான ஒரு வெப் சீரிஸ் பாக்கனுமா? அப்போ இந்த வதந்திய மிஸ் செய்யாதீர்கள்!

ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Happy Raj Movie: ஜி.வி.பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ பட சூப்பர் அப்டேட் – காமெடியுடன் வெளியான புரோமோ இதோ!