GV.Prakash: திரையரங்குகளில் முதல் இடம்.. குட் பேட் அக்லி – பதிவை வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ்!
GV Prakash X Post: இந்த 2025ம் ஆண்டில் தல அஜித் குமாரின் நடிப்பில் வெளியான பிரம்மாண்ட படம்தான் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். அந்த வகையில் திரையரங்குகளில் இந்த 2025ம் ஆண்டில் முதல் இடத்தை இப்படம் பிடித்திருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தல அஜித் குமாரின் (Ajith Kumar) நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் இரண்டு திரைப்படங்கள் சினிமாவில் வெளியாகியிருந்தது. அதில் வெளியாகி தென்னிந்திய முழுவதும் நல்ல வசவெற்பை பெற்று, நல்ல விமர்சனங்களைப் பெற்ற திரைப்படம்தான் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த திரைப்படத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியிருந்தார். இவ்வரிகள் இருவரின் கூட்டணியில் இந்த படமானது வெளியாகியிருந்த நிலையில், சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்த நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைத்திருந்தார். இந்த படத்தின் மூலமா அஜித் குமாரின் படத்திற்கு முதல் முதலில் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இப்படத்தில் மாஸ் பி.ஜி.எம் மற்றும் பாடல்கள் இடம்பெற்றிருந்தது. இந்த படமானது 2025ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அதிகம் வரவேற்கப்பட்டு, வசூல் சாதனைப் படைத்த படத்தில் ஒன்றாக இருந்துவருகிறது. இந்நிலையில் ஓடிடியிலும் தற்போதுவரைக்கும் இப்படத்திற்கு வரவேற்புக்குகள் இருந்துவருகிறது. அந்த வகையில் இந்த படத்தினை குறித்து இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் குமார் எக்ஸ் போஸ்ட் ஒன்றி பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகியுள்ள மம்முட்டியின் டோமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
குட் பேட் அக்லி படம் குறித்து ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Super happy ❤️ NO.1 grosser of the year on all the top ten in theatres ❤️ #goodbadugly pic.twitter.com/HZNV8Fwug8
— G.V.Prakash Kumar (@gvprakash) December 29, 2025
அந்த பதிவில் ஜி.வி.பிரகாஷ் குமார், ” இந்த 2025ல் திரையரங்குகளில் வெளியான முதல் பத்து இடங்களில், குட் பேட் அக்லி முதல் இடத்தில உள்ளது. இது அருமை மற்றும் சந்தோசம்” என ஜி.வி.பிரகாஷ் குமார் பதிவை வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிற்து.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துவரும் புது படங்கள் :
இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் குமார் நாயகனாகவும் புது படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் ஹேப்பி ராஜ், இம்மார்ட்டல், மெண்டல் மனதில் உட்பட பல்வேறு படங்கள் தயாராகிவருகிறது.
இதையும் படிங்க: அப்படியொரு அசாத்தியமான படைப்பு.. விக்ரம் பிரபுவின் சிறை படத்தைப் பாராட்டிய மாரி செல்வராஜ்!
அதில் ஹேப்பி ராஜ் மற்றும் இம்மார்ட்டல் போன்ற திரைப்படங்களின் டீசர் இந்த 2025 டிசம்பர் மாதத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படங்கள் வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.