ஓடிடியில் வெளியாகியுள்ள மம்முட்டியின் டோமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
Dominic and the Ladies' Purse OTT Update: நடிகர் மம்முட்டியின் நடிப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியான படம் டோமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ். இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
மலையாள சினிமாவில் கடந்த 23-ம் தேதி ஜனவரி மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் டோமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ். இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கி இருந்தார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக இருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் மலையாள சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் கோகுல் சுரேஷ், சுஷ்மிதா பட், சுதேவ் பாபு, விஜி வெங்கடேஷ், வினீத், விஜய் பாபு, மீனாட்சி உன்னிகிருஷ்ணன், ஷைன் டாம் சாக்கோ, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, லீனா, வஃபா கதீஜா ரஹ்மான், அர்ஜுன் நந்தகுமார், தினேஷ் பிரபாகர், அஷ்வின் மேத்யூ, நீரஜா ராஜேந்திரன், வீணா நாயர், பி.ஆர்.ராஜசேகரன், ரகுநாத் பலேரி, யாசர், ஹர்ஷிதா ஜே.பிஷாரடி, லயா சிம்சன், சுதா சுமித்திரன், ஜெயக்குமார் ஜானகிராமன், சித்திக், சுரேஷ் கிருஷ்ணா, அந்தோணி, கௌதம் வாசுதேவ் மேனன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தயாரித்து இருந்த நிலையில் இசையமைப்பாளர் தர்புகா சிவா இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
டோமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் படம் எப்படி இருக்கு?
கலர் ப்ளைண்ட் பிரச்சனை உள்ள மம்முட்டி காவல் துறையில் பணியாற்றவேண்டும் என்ற ஆசையின் காரணமாக போலியான சான்றிதழ்களை தயார் செய்து பணியில் சேர்ந்து மாட்டிக்கொள்கிறார். இதனால் வேலை இழந்த மம்முட்டி தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி ஒன்றை நடத்தி வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் தனது வீட்டின் ஹவுஸ் ஓனருக்கு ஒரு பெண்ணின் பர்ஸ் கிடைக்கின்றது.




Also Read… சூர்யா 46 படம் இப்படிதான் உருவானது… இயக்குநர் வெங்கி அட்லூரி சொன்ன விசயம்
அந்த பர்ஸை உரிய நபரிடம் சேர்க்க வேண்டும் என்று நினைத்த அந்த ஹவுஸ் ஓனர் மம்முட்டியிடம் உதவி கேட்கிறார். அதன்படி அந்த பர்ஸ் யாருடையது என்று தேடும் போதுதான் அந்த பர்ஸிற்கு சொந்தமான பெண் காணாமல் போன தகவல் கிடைக்கிறது. பர்ஸ் கொடுக்க சென்ற இடத்தில் பெண் காணாமல் போயிருப்பதை அறிந்த மம்முட்டி அதனையும் ஒரு கேசாக கருதி தேடத் தொடங்கிறார். அதில் பல குழப்பங்கள் ஏற்படுகிறது. இதனை அனைத்தையும் எப்படி தீர்த்து அந்த கேஸை மம்முட்டி முடித்தார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… விஜய் சார் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது – நடிகை பூஜா ஹெக்டே