Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நம்ம நண்பர் அஜித்தின் பில்லா … ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சால் அதிர்ந்த அரங்கம்

Thalapathy Vijay : ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், இங்கே நிறைய படங்கள் மலேசியாவில் படமாக்கப்பட்டிருக்கின்றன. நண்பர் அஜித் நடித்த பில்லா கூட இங்க ஷூட் பண்ணது தான். என் படங்களான காவலன், குருவி படங்கள் கூட இங்கே படமாக்கப்பட்டன என்றார்.

நம்ம நண்பர் அஜித்தின் பில்லா … ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சால் அதிர்ந்த அரங்கம்
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் அஜித் குறித்து பேசிய விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 27 Dec 2025 23:08 PM IST

ஜனநாயகன் (Jananayagan) பட இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27, 2025 அன்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தப் படம் தளபதி விஜய்யின் கடைசி படம் என்பதால் அவர் பேசுவதைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். சுமார் 80,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு ட்ரிபியூட் அளிக்கும் விதமாக அனுராதா ஶ்ரீராம், கிருஷ், எஸ்பிபி சரண், விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் அவர் நடித்த படங்களில் இருந்து பாடல்களை பாடினர். இது ரசிகர்களிடையை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அஜித் குறித்து பேசிய விஜய்

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், இங்கே நிறைய படங்கள் மலேசியாவில் படமாக்கப்பட்டிருக்கின்றன. நண்பர் அஜித் நடித்த பில்லா கூட இங்க ஷூட் பண்ணது தான். என் படங்களான காவலன், குருவி படங்கள் கூட இங்கே படமாக்கப்பட்டன. இலங்கைக்கு பிறகு மலேசியாவில் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். நான் சிறிய மணல் வீடு கட்ட சினிமாவுக்கு வந்தேன். நீங்கள் எனக்கு அரண்மனையை வழங்கியிருக்கிறீர்கள் என்றார்.

இதையும் படிக்க : Thalapathy Thiruvizha: ஜன நாயகன் பட இசை வெளியீட்டு விழா – அரங்கத்திற்கு வந்த தளபதி விஜய் – பூஜா ஹெக்டே…!

மேலும் பேசிய அவர், இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவிய மலேசிய அரசுக்கு நன்றி. நான் நடிக்க வந்த முதல் நாளில் இருந்து விமர்சனங்களை சந்தித்து வருகிறேன். அதே பழைய கதை தான். என்னுடைய ரசிகர்கள் என்னை ஆரம்பத்தில் இருந்து ஆதரித்து வருகிறார்கள். சும்மா இல்ல, 33 வருடங்களாக சப்போர்ட் தராங்க. அதனால் தான், எனக்காக நின்ன ரசிகர்களுக்காக நான் நிக்கப்போகிறேன். நான் நன்றினு சொல்றவன் இல்ல. நன்றிக்கடனை தீர்த்துட்டு தான் போவான் இந்த விஜய்.

‘குடும்பங்கள் கொண்டாடும் தங்கை’

நான் அனிருத்தை எம்டிஎஸ் என சொல்வேன். அதாவது மியூக்கல் டிபார்ட்மென்டல் ஸ்டோர். அனிருத் ஒரு கடை தான். நீங்கள் அதன் கதவைத் திறந்து உங்களுக்கு தேவையான பாடல்களையும் பின்னணி இசையையும் எடுத்துக்கொள்ளலாம்.  இயக்குநர் வினோத் ஒரு சமூக பொறுப்புள்ள இயக்குநர். நாங்கள் முன்னாடியே இணைந்து ஒரு படம் செய்ய வேண்டியது. இறுதியாக தற்போது நடந்திருக்கிறது.

இதையும் படிக்க : Jana Nayagan: ஜன நாயகன் ஆடியோ ரிலீஸ்… திருவிழா கொண்டாட்டத்தில் மலேசியா.. விஜய் மாஸ் எண்ட்ரி!

மமிதா இனி டியூட் மட்டுமல்ல. இந்தப் படத்தில் இருந்து இனி குடும்பங்கள் கொண்டாடும் தங்கச்சியாக மாறுவார். பொதுவாக ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் தான் கெமிஸ்ட்ரி இருக்கும். ஆனால் எனக்கும் பிரகாஷ் ராஜ் சாருக்கு கில்லியில் இருந்து சிறப்பான கெமிஸ்ட்ரி இருக்கிறது. நன்றி பிரகாஷ் ராஜ் சார். உங்கள் வாழ்க்கையில் வெல்ல வேண்டும் என்றால் உங்களுக்கு நண்பர்கள் தேவையா என தெரியாது. ஆனால் வலுவான எதிரி வேண்டும். அப்படி வலுவான எதிரி இருந்தால் தான் நீங்கள் வலுவாக முடியம். 2026ல் வரலாறு திரும்பும். நன்றி மலேசியா என பேசினார்.