Thalapathy Thiruvizha: ஜன நாயகன் பட இசை வெளியீட்டு விழா – அரங்கத்திற்கு வந்த தளபதி விஜய் – பூஜா ஹெக்டே…!
Jana Nayagan Audio Launch Malaysia: தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக இந்த ஜன நாயகன் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, தளபதி திருவிழா என்ற பெயரில் மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. இந்த விழாவிற்கு தயாரான தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவிவருகிறது.
நடிகர் விஜய்யின் (Thalapathy Vijay) ஜன நாயகன் (Jana Nayagan) திரைப்படத்தில் ஆடியோ லாஞ்ச் இன்று 2025 டிசம்பர் 27ம் தேதியில் மலேசியாவில் (Malaiysia) உள்ள கோலாலம்பூர் புக்கிட் ஜலீல் தேசிய அரங்கத்தில் ( Bukit Jalil National Stadium in Kuala Lumpur) வைத்து மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த படங்களின் 30 பாடல்கள் பாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பாடகர்கள் சுவேதா மோகன் (Swetha Mohan), அனுராதா (Anuradha), திப்பு, ஆண்ட்ரியா (Andrea), சைந்தவி (Saindhavi) மற்றும் விஜய் ஏசுதாஸ் உட்பட பலவேறு பாடகர்களும் இணைந்து பாடல்களை பாடுகின்றனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியானது சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியானது மிக பிரம்மாண்டமாக நடந்துவரும் நிலையில், தளபதி விஜய்யின் ரசிகர்கள் கிட்டத்தட்ட 80,000 மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியானது தொடங்கிய நிலையில், தொடர்ந்து தளபதி விஜய்யின் பட பாடல்கள் பாடப்பட்டுவருகிறது. மேலும் இசை வெளியீட்டு விழா அரங்கமானது முழுவதுமாக நிறைந்துள்ளது. அந்த வகையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் அரங்கத்திற்கு செல்வதற்காக பூஜா ஹெக்டே (Pooja Hegde) மற்றும் தளபதி விஜய் புறப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: அதிரடி ஆரம்பம்.. ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா – மேளதாள கொண்டாட்டத்தில் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!
தளபதி விஜய் தளபதி திருவிழா நிகழ்ச்சிக்கு புறப்பட்ட வைரல் வீடியோ :
Thalapathy @actorvijay Tharisanam 😍😍😍#ThalapathyVijay#thalapathyThiruvizha #JanaNayagan pic.twitter.com/R0XJrbxrv3
— Harish (@HariMDR3) December 27, 2025
தளபதி விஜய் அடர் நீல நிற கோர்ட் ஷூட் அணிந்தபடி, ரசிகர்களுக்கு கைகாட்டுவது போன்று இந்த வீடியோவில் உள்ளது. பின் ரசிகர்கள் இந்த வீடியோவில் “தளபதி தளபதி” என கோஷங்கள் எழுப்புவது தொடர்பாக இந்த வீடியோவில் உள்ளது.
இதையும் படிங்க: முழுவதும் திரில்லர்.. சந்தீப் பிரதீப்பின் எக்கோ படத்தை எந்த ஓடிடியில்.. எப்போது பார்க்கலாம்?
தளபதி திருவிழாவிற்கு புறப்பட்ட பூஜா ஹெக்டே வீடியோ :
Glowing and Gorgeous 😍❤️#PoojaHegde • @hegdepooja pic.twitter.com/y1N8OWaFtI
— Pooja Hegde Trends ™ (@PoojaTrends) December 27, 2025
நடிகை பூஜா ஹெக்டேவும் இந்த தளபதி திருவிழா நிகழ்ச்சிகள் புறப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோவும் இணையத்தில் தீயாக பரவிவருகிறது.