Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிரடி ஆரம்பம்.. ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா – மேளதாள கொண்டாட்டத்தில் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

Thalapathy Malaysia Fans Celebrations: தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று 2025 டிசம்பர் 27ம் தேதியில் மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியானது மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான கொண்டாட்டத்தை ரசிகர்கள் துவங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

அதிரடி ஆரம்பம்.. ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா – மேளதாள கொண்டாட்டத்தில் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!
தளபதி மலேசியா ரசிகர்கள் கொண்டாட்டங்கள்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 27 Dec 2025 14:28 PM IST

கோலிவுட் சினிமாவின் மிக பிரபல நடிகராக இருப்பவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் கடைசி திரைப்படமாக வெளியீட்டிற்கு தயாராகிவருவதுதான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படமானது அரசியல், ஆக்ஷன், எமோஷனல் என ஒரு கலவையான திரைப்படமாக தயாராகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் (H.Vinoth) இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தை கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் தளபதி விஜய்யின் கடைசி படம் என கூறப்படும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா “தளபதி திருவிழா” (Thalapathy Thiruvizha) என்ற பெயரில் மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி இன்று 2025 டிசம்பர் 27ம் தேதியில் மலேசியாவில் (Malaysia) மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் பல கோலிவுட் நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் பாடகர்கள் என பலரும் கலந்துகொள்கின்றனர்.

அந்த வகையில் இந்திய நேரப்படி இந்த நிகழ்ச்சி இன்று 2025 டிசம்பர் 27ம் தேதியில் மதியம் 1 மணி (மலேசியாவில் மதியம் 3:30 மணி) முதல் தொடங்குகிறது. இசை வெளியீட்டு விழாவின் அரங்கத்தில் நுழைவதற்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் மேளதாளத்துடன் ஆட்டம் பாட்டம் என ரசிகர்கள் இந்த இசை வெளியீட்டு விழாவை கொண்டாடிவருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஜன நாயகன் ஆடியோ ரிலீஸ்… திருவிழா கொண்டாட்டத்தில் மலேசியா.. விஜய் மாஸ் எண்ட்ரி!

தளபதி திருவிழா நிகழ்ச்சியை மேளதாளத்துடன் கொண்டாடும் மலேசிய ரசிகர்கள் :

இந்த ஜன நாயகன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கிட்டத்தட்ட 80,000 ரசிகர்கள் கலந்துகொள்வதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவிலே இசை வெளியீட்டு விழாவிற்கு இவ்வளவு கூட்டம் கூடிய ஒரே நிகழ்ச்சி தளபதி திருவிழாதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த அரங்கத்தின் நுழைவிற்காக ரசிகர்கள் நீளமான வரிசையில் நின்ற காட்சிகளும் இணையத்தில் வைரலாகிவருகிறது .

இதையும் படிங்க: 2025ல் வெளியான மலையாளம் பெஸ்ட் திரில்லர் திரைப்படங்கள் என்னென்ன?

இசை வெளியீட்டு விழா அரங்களில் நுழைய காத்திருக்கும் ரசிகர்கள் வீடியோ பதிவு:

இந்த தளபதி திருவிழா நிகழ்ச்சிக்காக பல நாடுகளில் இருந்து தளபதி விஜய்யின் ரசிகர்கள் மலேசிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதான் தளபதி விஜய்யின் கடைசி இசை வெளியீட்டு விழா என கூறப்படும் நிலையில், ரசிகர்கள் எமோஷனலாக தங்களின் கருத்துக்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.