Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பராசக்தி படத்திற்கு பல பிரச்னைகள் வந்தது – தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்

Producer Aakash Baskaran: தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன். இவரது தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பராசக்தி. இந்தப் படம் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து என்ன பிரச்னைகள் ஏற்பட்டது என்பது குறித்து சமீபத்தில் பேசியுள்ளார்.

பராசக்தி படத்திற்கு பல பிரச்னைகள் வந்தது – தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்
ஆகாஷ் பாஸ்கரன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Dec 2025 16:33 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல தயரிப்பாளராக வலம் வருகிறார் ஆகாஷ் பாஸ்கரன். இவரது தயாரிப்பில் முன்னதாக தமிழ் சினிமாவில் இட்லி கடை படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடித்தார். தொடர்ந்து இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனா ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் இவரது தயாரிப்பில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பரசக்தி, நடிகர் அதர்வா முரளி நடிப்பில் இதயம் முரளி ஆகியப் படங்களையும் தயாரித்து வருகின்றார்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பராசக்தி. இந்தப் படத்தின் வெளியீடு வருகின்ற ஜனவரி மாதம் 10-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அளித்த பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

பராசக்தி படத்திற்கு பல பிரச்னைகள் வந்தது:

பராசக்தி திரைப்படத்தின் தணிக்கையில் எங்களுக்குப் பிரச்சனைகள் ஏற்பட்டன, அதனால் நாங்கள் மறுஆய்வுக் குழுவிடம் சென்றோம். படத்தின் ஆரம்பத்திலிருந்தே, இந்தத் தலைப்பைத் தொடுவதற்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், இந்தத் தலைப்பு நாங்கள் நோக்கிய பார்வையாளர்களைச் சென்றடையும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். சுதந்திரத்திற்குப் பிறகு தோன்றிய இந்த இயக்கத்தைப் பற்றி இதுவரை யாரும் பேசவில்லை. நாங்கள் தான் முதன்முறையாக இதைப் பற்றிப் பேசுகிறோம் என்று ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்து இருந்தது ரசிகரக்ளிடிஅயே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… அப்படியொரு அசாத்தியமான படைப்பு.. விக்ரம் பிரபுவின் சிறை படத்தைப் பாராட்டிய மாரி செல்வராஜ்!

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Parasakthi: சிவகார்த்திகேயனின் பராசக்தி பட ‘வேர்ல்ட் ஆஃப்’ பராசக்தி வீடியோ வெளியானது..!