Parasakthi: சிவகார்த்திகேயனின் பராசக்தி பட ‘வேர்ல்ட் ஆஃப்’ பராசக்தி வீடியோ வெளியானது..!
World of Parasakthi: தொகுப்பாளராக தொடங்கி தற்போது நடிகராக சினிமாவில் நடித்துவருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் பராசக்தி என்ற படமானது வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது. அந்த வகையில் இந்த படத்தின் உருவாக்கத்தின்போது எடுக்கப்பட்ட காட்சிகளை படக்குழு தொகுத்து ஒரே BTS வீடியோவாக வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துவருகிறது.
இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள உண்மை கதைதான் பராசக்தி (Parasakthi). இந்த படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிக்க, அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடித்துள்ளார். இவர் இந்த படத்தின் மூலமாக அவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பராசக்தி திரைப்படமானது கடந்த 1960ல் நடந்த இந்தி திணிப்பிற்கு எதிரான மாணவர்கள் போராட்டம் குறித்த கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரன் டான் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ள நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV. Prakash kumar) இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரின் இசையில் உருவாகிவரும் 100வது படமாக இந்த பராசக்தி திரைப்படம் அமைந்துள்ளது. அந்த வகையில் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் உருவாக்கத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், இப்படத்தின் ஷூட்டிங்கின்போது நடந்த விஷயங்கள் குறித்து படக்குழு ஒரு தொகுப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை “வேர்ல்ட் ஆஃப் பராசக்தி” என்ற டைட்டிலில் படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: அமித்தை தொடர்ந்து இன்று பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவது இவர்தான் – கசிந்தது தகவல்
பராசக்தி படக்குழு வெளியிட்ட வேர்ல்ட் ஆஃப் பராசக்தி வீடியோ பதிவு :
Enter the #WorldOfParasakthi – an inside look into the making of the film 🎥
Get ready for the grand arrival in theatres, on 10th January 2026!
🔗 – https://t.co/o6Go0jEZpN#ParasakthiFromPongal#ParasakthiFromJan10@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan…
— DawnPictures (@DawnPicturesOff) December 28, 2025
சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது :
இந்த பராசக்தி படமானது இந்தி திணிப்பு மற்றும் மாணவர்கள் போராட்டத்தை மையமாக கொண்டு தயாராகியுள்ளது. இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா, ராணா, பேசில் ஜோசப் மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது உண்மை சம்பவத்தை மையமாக கொண்டுள்ள நிலையில், ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க: ஜனநாயகன் படம் ரீமேக்கா? – முதன்முறையாக இயக்குநர் வினோத் விளக்கம்
இந்த படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதன்படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் இப்படத்தின் ட்ரெய்லரும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகளை படக்குழு இன்னும் வெளியிடவில்லை. விரைவில் வெளியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.