2026ல் வெளியாகவிருக்கும் தென்னிந்திய பிக் பட்ஜெட் படங்கள் என்னென்ன தெரியுமா?
High Budget South Indian Films In 2026: தென்னிந்திய சினிமாவில் தற்போது பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டில் வெளியாகி காத்திருக்கும் தென்னிந்திய மொழி படங்கள் என்னென்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
ஜன நாயகன் திரைப்படம் : தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன்ஸ் என்ற கன்னட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்கியுள்ளார். இவர்களின் கூட்டணியில் உருவான இந்த படத்தில் விஜய், பூஜா ஹெக்டே (Pooja Hegde), மமிதா பைஜூ (Mamitha baiju), பாபி தியோல், நரேன் மற்றும் பிரியாமணி உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படம்தான் வரும் 2026ல் ஆண்டில் வெளியாகும் முதல் ஹை பட்ஜெட் படமாகும். இப்படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?, சுமார் ரூ 430 கோடிகள் என கூறப்படுகிறது. இப்படத்தில் நடிப்பதற்கு மட்டுமே தளபதி விஜய் ரூ 275 கோடிகளை சம்பளமாக பெற்றுள்ளாராம். அந்த வகையில் இப்படம் ரூ 700 கோடிகளுக்கு மேல் வசூலித்து சூப்பர் ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அப்படியொரு அசாத்தியமான படைப்பு.. விக்ரம் பிரபுவின் சிறை படத்தைப் பாராட்டிய மாரி செல்வராஜ்!
ஜெயிலர் 2 திரைப்படம் (Jailer 2) :
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் ஜெயிலர் 2. இந்த படமானது கடந்த 2023ல் வெளியான ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் தயாராகிவருகிறது. இதில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், விஜய் சேதுபதி உட்பட பல்வேறு நடிகர்கள் இணைந்துள்ளனர்.




இதையும் படிங்க: 2025ல் தோல்வி படங்களை கொடுத்த பிரபல தமிழ் இயக்குநர்கள்.. அட இவர்களும் இந்த லிஸ்டில் உண்டா?
இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இந்த பிரம்மாண்ட கூட்டணியில் உருவாக்க்கியுள்ள இந்த படமானது சுமார் ரூ 300 கோடி முதல் ரூ 450 கோடி பட்ஜெட்டில் தயாராகிவருவதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்சிக் திரைப்படம் (Toxic Movie) :
பிரபல கன்னட நடிகரான யாஷின் (Yash) நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள படம் டாக்சிக். இந்த படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்க, ஜன நாயகன் படத்தை தயாரித்த கே.வின்.என். ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், தற்போது இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்த வெளியாகிவருகிறது. அந்த வகையில் இப்படத்தில் யாஷுடன் நடிகர்கள் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் உட்பட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படமானது சுமார் ரூ 300 முதல் ரூ 600 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாம். இப்படம் வரும் 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதியில் பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.
பெடி திரைப்படம் (Peddi Movie):
நடிகர் ராம் சரணின் (Ram Charan) முன்னணி நடிப்பில் வெளியாகி காத்திருக்கும் படம்தான் பெடி. இந்த படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கிவருகிறார். இவரின் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் நடிகர்கள் ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார். ஜெகபதி பாபு உட்பட பால்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. இப்படமானது குமார் ரூ 300 கோடிகள் பட்ஜெட்டில் தயாராகிவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு மார்ச் 27ல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
என்.டி.ஆர்.நீல் திரைப்படம் (NTRNEEL) :
கே.ஜி.எஃப் மற்றும் சலார் திரைப்பட புகழ் பெற்ற இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜீனியர் என்.டி.ஆர்(Jr.NTR) இணைந்துள்ள படம்தான் NTRNeel. இப்படத்தை புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துவருகிறது. இப்படம் சுமார் ரூ 360 கோடிகளுக்கு மேல் பட்ஜெட்டில் தயாராகிவருகிறதாம். இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், இதில் ஜூனியர் என்.டி.ஆர்.-க்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடித்தவருகிறார். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.